உங்கள் விசுவாசம், மற்றவர்களுக்கு விடுதலையை கொடுக்கும்:-

மாற் 2:5. இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

கப்பர்நகூம் பட்டணத்திற்கு இயேசு வந்தபோது அவரை பார்க்க ஜனங்கள் திரளாய் வந்திருந்தார்கள். நிற்க கூட இடமில்லாதபடி ஜனங்களின் கூட்டம் இருந்தது. அப்பொழுது ஒரு திமிர்வாதக்காரனை நான்கு பேர் சுமந்துகொண்டு வந்தார்கள். ஜனக்கூட்டம் மிகுதியாய் இருந்தபடியால் அந்த நான்கு பேரும் வீட்டின் மேற்கூரையை பிரித்து திமிர்வாதக்காரனை இறக்கி இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அந்த திமிர்வாதக்காரனை கொண்டு வந்த அந்த நான்கு பேரின் விசுவாசத்தை கண்டு திமிர்வாதக்காரனின் பாவம் நீங்கி சொஸ்தப்படுத்தினார்.

ஒரு தகப்பனின் விசுவாசத்தை கண்டு ஊமையான ஆவி பிடித்திருந்த அவனுடைய மகனுக்கு இயேசு விடுதலையை கொடுத்தார் (மாற் 9:24). ஒருமுறை கானானிய ஸ்திரி இயேசுவிடம் வந்து தன்னுடைய மகள் பிசாசினால் கொடிய வேதனை படுகிறாளென்றும், கானானிய ஸ்திரி இயேசுவின் மீது வைத்த விசுவாசத்தை கண்டு அவளுடைய மகள் ஆரோக்கியமடையும்படி இயேசு செய்தார் (மத் 15:28). ஒருமுறை நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம் வந்து தன்னுடைய வேலைக்காரன் திமிர்வாதக்காரனாய் இறுக்கினானென்றும், அவனை சொஸ்தப்படுத்தவேண்டுமென்று இயேசுவின் மீது விசுவாசம் வைத்ததினால், அவனுடைய விசுவாசத்தினிமித்தம் இயேசு அந்த வேலைக்காரனை குணப்படுத்தினார் ( மத் 8:13).

ஒரு ஊரில் இப்படி தான் ஒருவர் பிறந்த நாளிலிருந்து நடக்கமுடியாமல் முடமாய் இருந்தார். அருகிலிருக்கும் ஒரு விசுவாசி அவர் இயேசுவின் மீது விசுவாசத்தை வைத்து அந்த முடவரை நாற்காலியில் வைத்து ஒரு சுகமளிக்கும் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். அந்த முடவருக்கு ஏதோ அவர்கள் கூட்டிச்செல்கிறார்கள் என்று சொல்லி அவர் வந்தார். என்ன ஆச்சரியம் இயேசு அந்த விசுவாசியின் விசுவாசத்தை கண்டு பிறந்த நாள் முதல் முடமாய் இருந்த அந்த வாலிபர் எழுந்து நடக்கும்படி அற்புதம் செய்தார்.

இப்படித்தான் நீங்களும் அநேக புறஜாதி மக்கள், திமிர்வாதக்காரர்கள், நோயினால் வாடி தவிப்பவர்கள், எல்லா மருத்துவர்களாலும் கைவிடப்பட்டவர்கள், பாவ பிடியில் சிக்கி தவிப்பவர்கள் என்று அநேகர் காணப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் சந்திக்கும்போது அவர்களை இயேசுவுக்கு நேராக வழிநடத்தும்படியான பொறுப்பு உங்களுக்கு காணப்படுகிறது. நீங்கள் இயேசுவின் மீது விசுவாசம் வைத்து அவர்களை சபைக்கு நேராக அழைத்து சென்று இயேசுவை காண செய்வீர்களென்றால்; இயேசு உங்கள் விசுவாசத்தின்படி நீங்கள் அழைத்து கொண்டுவந்தவர்களுக்கு விடுதலையை கொடுப்பார்.

இயேசு உங்கள் விசுவாசத்தை கனப்படுத்துவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org