Vitamin D

கத்தார் ஒரு வெப்பமான தேசம், ஆனால் ஆச்சரியமாக  அங்கு அதிக வருடம் வசிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு வைட்டமின் D (Vitamin D deficiency) பற்றாக்குறை இருப்பதாக ஒரு தகவல் உள்ளது. போதிய அளவு சூரிய வெளிச்சம் உடலில் படாததுதான் காரணம். சூரிய வெளிச்சம் தான்  வைட்டமின் D உற்பத்திற்கு முக்கிய ஆதாரம். மனிதர்களுக்கு மட்டும் அல்ல தாவரங்கள், விலங்குகளுக்கும் சூரிய வெளிச்சம் அவசியமாகிறது.

வேதத்தில் தேவன்  “என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள் – Malachi 4:2” என்று வாக்களித்திருக்கிறார்.

நீதியின் சூரியன் உதிக்கும் போது பரிபூரண சுகம் உண்டாகிறது. நீதியின் சூரியன் யார் மேல் உதிக்கும் என்றால் அவருக்கு பயந்தவர்கள் மீதே !

கர்த்தருக்கு பயந்து தீமையை விட்டு விலகு. அது உன் உடலுக்கு ஆரோக்கியத்தை கொண்டு வரும் (Prov. 3:7,8). கர்த்தருக்கு பயப்படுதல் ஆயுசு நாட்களை பெருகப் பண்ணும் (Prov. 10:27) என்று வேதம் சொல்கிறது.

தேவ பயம் என்றால் என்ன ? தேவனுக்கு பயந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று வேதம் சொல்கிறது.

* தேவனுக்கு பயந்தவர்கள்  அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவார்கள் (Gen. 22:12)

 * தேவனுக்கு பயந்தவர்கள் தீமையை வெறுப்பார்கள் (Prov. 8:13).

*தேவனுக்கு பயந்தவர்கள்  பொல்லாங்கானது என்று தோன்றுகிற செயல்கள் ,பேச்சுக்கள், காட்சிகள், வருமானங்கள், எதுவானாலும் சரி  அவைகளை விட்டு விலகுவார்கள் (Job 1:8).

* தேவனுக்கு பயந்தவர்கள் எல்லாவற்றிலும் தேவனை கனம் பண்ணுவார்கள் (Mal 1:6).

பார்வோன் எகிப்து தேசத்தின் மருத்துவப் பெண்களிடம் ஒரு கட்டளை பிறப்பித்தான். அதன்படி இஸ்ரவேல் தேசத்து பெண்களின் பிரசவம் பார்க்கும்போது ஆண் பிள்ளை பிறந்தால் கொல்லவேண்டும் பெண் பிள்ளை என்றால் உயிரோடு வைக்கவேண்டும். அந்த மருத்துவ பெண்கள் தேவனுக்கு பயந்தததினால் ராஜாவின் கட்டளை படி செய்யவில்லை (Exo. 1:17).

எகிப்து தேசத்தை சாரந்தவர்கள் என்றாலும் தேவ பயத்துடன் வாழ்ந்ததால், கர்த்தர் அந்த மருத்துவ பெண்களையும் அவர்கள் குடும்பங்களையும் ஆசிர்வதித்தார் (Exo. 1:20,21).

நீதியின் சூரியன்  உங்கள் மேல் உதிப்பதாக

Thivakar .B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org