ரோம 14:1. விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
ஒரு புறஜாதி குடும்பத்தை சேர்ந்த சகோதிரி ஒருவர் இயேசுவை ஏற்றுக்கொண்டு மூழ்கி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள். தன்னுடைய வீட்டில் யாருக்கும் தெரியாமல் வேதத்தை வாசிப்பதும், ஜெபம் செய்வதுமாய் இருந்தார்கள். இதை பார்த்த அவர்களுடைய வீட்டார் அந்த சகோதரிக்கு விரோதமாக எழும்பி வீட்டில் வேதாகமம் இருக்க கூடாது என்று சொல்லி அதை தூக்கி எரிந்தார்கள். வீட்டில் ஜெபம் செய்யக்கூடாது என்று கடிந்து கொண்டார்கள். சபை ஆராதனைக்கு கடந்து செல்லக்கூடாது என்று கட்டளை போட்டார்கள். இதினிமித்தம் மிகுந்த சோகத்தில் சில வருடங்கள் அவர்கள் இருந்தார்கள். சில வருடங்கள் கழித்து அந்த சகோதரிக்கு ஏதோ ஒரு நோயின் நிமித்தமாக ஒரு வகையான பயம் அவர்களை ஆட்கொண்டது. இதற்காக யாரவது தனக்காக ஜெபிக்க மாட்டார்களா என்று ஏங்கினார்கள். ஒருமுறை ஒரு ஊழியக்காரரை சந்தித்து தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்து சொல்லி தனக்காக ஜெபிக்கும்படியாக கூறினார்கள். அந்த ஊழியக்காரர் அந்த சகோதிரியை ஒரு வகையான ஐயம், பயம் இருப்பதை கேள்விப்பட்டு, இந்த சகோதிரி எப்படிபட்டதான பாவத்தை செய்தார்களோ என்று சொல்லி மனதிற்குள் குற்றம் பிடிக்கிறவராய் காணப்பட்டார்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் இப்படியாக மற்றவர்களுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்க கூடாது. அப்படிப்பட்டவர்கள் விசுவாசத்தில் பலவீனமுள்ளவர்கள் என்று வேதம் சொல்லுகிறது. மாத்திரமல்ல அவர்களை நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. அநேக பலவீனமுள்ளவர்கள் காணப்படலாம். மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிற பலவீனன் காணப்படலாம்; ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணலாம்; எப்படியாக இருந்தாலும் நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். இப்படியிருக்க மற்றவர்களுடைய பலவீனத்தைக்குறித்து அவர்களை குற்றவாளியாக தீர்க்கக்கூடாது. மாறாக அப்படிப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
மாத்திரமல்ல வசனம் சொல்லுகிறது அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும் (ரோமர் 15:1) என்பதாக.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

