இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் (Luke 2:52). தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான் (2 Sam. 5:10).
மேற்கண்ட வசனங்களில் நாம் பெருக வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். வேதம் சொல்கிறபடி நாம் சில காரியங்களில் பெருக வேண்டும்
1.கொடுப்பதில் பெருக வேண்டும் (Excel in Grace of Giving)
இன்றைக்கு புதிய ஏற்பாடு விசுவாசி தசமபாகம் கொடுப்பது சரியா? தவறா? என்ற வாதம் எழுகிறது.
கல்வாரி அன்பை அறியாத பழைய ஏற்பாடு விசுவாசிகள், பரிசேயர்கள் கூட தசமபாகம் கொடுத்திருக்கும்போது, சிலுவை அன்பை ருசித்தவர்கள் எவ்வளவாய் கொடுக்கவேண்டும்!
தன் ஜீவனையே நமக்காக கொடுத்தவருக்கு ‘கொடுப்பதில்’ நாம்u பெருகவேண்டும். (2 Cor. 8:7)
You can give without loving but you cannot love without giving – Amy Carmichael
2. அன்பில் பெருக வேண்டும் (Increase in love)
அன்பே பிரதானம். கடந்த நாட்களை காட்டிலும் தேவன் மேல் உள்ள அன்பில் பெருகவேண்டும். அது போல சகோதர சிநேகத்தில் பெருகவேண்டும் (1 Thess. 3:12,4:10)என்று வேதம் சொல்கிறது. நமக்காய் மாத்திரம் ஜெபிக்காமல் மற்றவர்களுக்காகவும் ஜெபிப்பதிலும் (Phil. 2:4) பிறரின் பாரம் சுமப்பதிலும் நாம் வளர வேண்டும் (Gal 6:2). தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1 john 4:20).
3. ஊழியத்தில் பெருக வேண்டும் (Abound in the works of Lord)
கர்த்தருக்குள் நாம் படுகிற பிரயாசங்கள் வீணாய் போகாது என்பதை அறிந்து ஊழியத்தில் நாம் பெருக வேண்டும் (1 Cori 15:58). நாம் அவருக்காக வாழும் படி இயேசு நமக்காக மரித்தாரே (2 Cori 5:15). தேவ கிருபையானது நம்மை கிறிஸ்துவுக்காய் அதிகம் பிரயாசம் படக்கூடியவர்களாய் மாற்றும் (1 Cor. 15:10)
தேவன் உங்களை பெருக செய்வாராக !
B. Thivakar
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

