சிந்தனையில் போராட்டம்?

ஒரு மனிதனின் நினைவு எப்படி இருக்கிறதோ அவன் அப்படியே இருக்கிறான் (Prov 23:7) என்று வேதம் சொல்கிறது.எனவேதான் நம்முடைய சிந்தனை வாழ்கை மிகவும் முக்கியம்.

இன்றைய நாட்களில் மன ரீதியாக அதிகமான யுத்தங்களை (Physiological war)சந்திக்க வேண்டியள்ளது.
இந்த யுத்தத்தில் நாம் எப்படி நடக்கவேண்டும் என்று வேதத்தில் அநேக ஆலோசானை கொடுக்கப் பட்டுள்ளது. அதில் ஒரு வசனத்தை இன்று தியானிப்போம்

“அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது” – Rom 1:21

ஒரு மனிதன் தேவனை அறிந்தவனாய் காணப்பட்டாலும், தேவனை மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலும் இருந்தால் முதலாவது அவனுக்கு வீணான சிந்தனை உண்டாகிறது.பின்பு இருதயம் உணர்வை இழக்கிறது, கடைசியில் இருதயம் இருளடைகிறது. உங்கள் வாழ்க்கையில் வீணான சிந்தனைகள் அடிக்கடி வருகிறதா? எதிர்மாறான எண்ணங்கள் ,இச்சையான எண்ணங்கள், பயங்கள், மேட்டிமையான எண்ணங்கள் வருகிறதா? ஜெபிக்க கூடாதபடி சிந்தனையில் போராட்டம் வருகிறதா? அப்படி என்றால் நீங்கள் தேவனை மகிமைப்படுத்துவதிலும், ஸ்தோத்திரிப்பதிலும் எப்படி இருக்கிறீர்கள் ? என்று ஆராய்ந்து பாருங்கள்.

நாம் தேவனை மகிமைப்படுத்துவதாலும் , ஸ்தோத்திரிப்பதாலும்,அவருக்கு ஒரு லாபமும் இல்லை! ஆனால் நமக்கே நன்மை உண்டாகிறது.
நான் உயிரோடிருக்கும் மட்டும் என் தேவனை துதிப்பேன் என்று சங்கீதக்காரன் அறிக்கை இடுகிறான் (Ps 147:2)வேதத்தின் மிகப்பெரிய புத்தகமான சங்கீதம் ‘சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா ‘என்று முடிகிறது.

தேவன் எப்படி பட்டவர் என்பதை அறிந்து அவருடைய அன்பிற்காக, வல்லமைக்காக, ஞானத்திற்காக கிரியைகளுக்காக அவரை துதிக்கவேண்டும்.தேவன் நமக்கு செய்த எல்லா நன்மைகளை நினைத்து அவருக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும்.
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன் (Ps 34:1)உயர்வானாலும், தாழ்வானாலும், வெற்றியோ, தோல்வியோ ,நிறைவோ, குறைவோ எல்லாவற்றிலும் நாம் அவரை ஸ்தோத்திரம் பண்ணவேண்டும்.

‘அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்’ – Heb 13:15

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !

“God, if you never answer another prayer while I live on this earth, I will still worship you as long as I live and in the ages to come for what you have done already. God already put me so far in debt that if I were to live one million millenniums I couldn’t pay Him for what He’s done for me – AW Tozer

Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org