சிலுவை இல்லையேல் சிங்காசனம் இல்லை:-

II தீமோத்தேயு 2 :11,12. இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

ரிச்சர்ட் உம்ப்ராண்ட் என்ற தேவ மனிதர் யேசுவுக்காக அநேக பாடுகளை சகித்தார். சுவிசேஷம் அறிவித்ததின் நிமித்தமாக அவர் ருமேனியா நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். பல பாடுகளை உபத்திரவங்களை சுவிசேஷத்தின் நிமித்தம் சகித்தார். முழுவதும் பழுக்க கூர்மையான கம்பி மற்றும் கத்திகளை கொண்டு சித்திரவதை செய்யப்பட்டார். ஒரே இடத்தில் பல மணிநேரங்கள் நிற்க வேண்டும், சிறிது நெளிந்தாலும் கூர்மையான ஆணிகள் உடலில் பாய்ந்துவிடும். குளிர் சாதன பெட்டியில் வைக்கப்பட்டு உயிர் போகும் நிலையில் வெளியே எடுத்து மீண்டும் அவரை குளிர் சாதன பெட்டியில் வைப்பார்கள். அவரை ஒரு சிறிய அறையில் அடைத்து பட்டினியால் இருக்கும் எலிகளை அவர் மீது விடுவார்கள். முதுகெலும்பு உடைக்கப்பட்டு, தீயினால் சுடப்பட்டு , சதைகள் பிய்க்கப்பட்டு சித்தரவதைபடுத்தப்பட்டார். எட்டரை ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்பு அவர் விடுதலை செய்யப்பட்டார். ஒரு வாரம் மட்டும் வீட்டிலிருந்து மீண்டும் அவர் இயேசுவை பற்றி சுவிசேஷத்தை பிரசங்கிக்க தொடங்கினார். அதனால் மீண்டும் ஐந்தரை ஆண்டுகள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் யேசுவைக்காக எந்த பாடுகளையும் சகிக்க ஆயத்தமாயிருந்தார்கள். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ சொன்னார்கள் யேசுவுக்காக எரிகிற அக்கினி சூளைக்குள் போடுவதை ஏற்றுக்கொண்டார்கள். தானியேல் தன்னை சிங்க கெபியில் போடுவதை ஏற்றுக்கொண்டான்.

கிருஸ்தர்கள், விசுவாசிகள் , ஊழியக்காரர்கள் என்று சொல்லக்கூடிய நாம் கிறிஸ்துவுக்காக எந்த பாடுகளையும் சகிக்க ஆயத்தமாயிருக்க வேண்டும். அண்ட சராசரங்களை படைத்தவர், ஆதியும் அந்தமுமானவர், முந்தினவரும் பிந்தினவருமானவர், அக்கினி ஜுவாலை போன்ற கண்களை உடையவர் அவ்வளவு பெரிய தேவன் சிலுவையின் பாதையில் சென்றிருப்பாரென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்!.

அவருக்காக பாடுகளை சகித்தால் நாம் ஆளுகை செய்வோம்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org