ஏசா 11 : 16. இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய ஜனத்தில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.
எகிப்திலே அடிமையாயிருந்த சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமான இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் செங்கடலை பிளந்து நடத்தியிருப்பாரென்றால், அந்த பாதை எவ்வளவு பெரியதாயிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு வழியே இல்லாமல் அடைக்கப்பட்ட சூழ்நிலை இருந்தாலும், ஒரு பெரியப்பாதையை கர்த்தர் உண்டுபண்ணினார். உங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார். எங்குபார்த்தாலும் அடைக்கப்பட்ட சூழ்நிலையா? தொழிலில் முன்னேற்றமில்லையா? வியாபாரத்தில் நஷ்டமா ? வாழ்க்கையில் முன்னேறிச்செல்வதற்கு வழியே இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? கர்த்தர் வழியே இல்லாத இடத்தில வழியை உண்டுபண்ணுகிறவர். பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார் என்ற வசனத்தின்படி அவர் உங்களை கண்டுபிடித்து நடத்துவர். காரணம் அவரே வழியும், அவரே சத்தியமும், அவரே ஜீவனுமாயிருக்கிறார். அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறவர்.
ஒருவேளை நீங்கள் பாதை தெரியாத ஆட்டை போல அலைந்து திரிந்துகொண்டிருக்கலாம். எப்படி ஒரு ஆடு பாதை தெரியாமல் அங்கும் இங்குமாக அலையுமோ, எப்படி ஒருவன் மிகப்பெரிய பாலைவனத்தில் சிக்கி பாதை தெரியாமல் அலைவனோ? எப்படி கப்பல் நடுக்கடலில் எல்லா தொழில்நுட்பமும் பழுதாகிப்போன நிலையில் வழி தெரியாமல் அங்கும் இங்குமாக போகுமோ? அது போல உங்கள் வாழ்க்கையில் பாதை தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தர் உங்களுக்கு சாதாரண பாதையை அல்ல; பெரும்பாதையை உண்டாக்குவார்.
எப்படிப்பட்ட பெரியப்பாதையில் நடத்துவார்? நீதியின் பாதையில் நடத்துவார்; கிருபையும் சாத்தியமுமுள்ள பாதையில் நடத்துவார்; நெய்யாய் பொழிகின்ற பாதையில் நடத்துவார். ஆகையால் பயப்படாமலும் கலங்காமல் இருங்கள்.
அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை (ஏசா 35 : 8 ) என்ற வசனத்தின்படி நிச்சயமாக மெரும்பாதை உண்டாகும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

