இன்றும் தேவன் பேசுகிறார் என்று பைபிள் சொல்கிறது (எபிரேயர் 3:7,15)
இயேசு கிறிஸ்து தம் இரத்தத்தை சிந்தி புதிய உடன்படிக்கை செய்தார் (மத் 26:28)
அந்த உடன்படிக்கையின் காரணமாக, தேவன் தனது மக்களுடன் பேசுகிறார்
(எரேமியா 31)
என் ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கும் என்பது ஆண்டவரின் வாக்கு(யோவான் 10:27)
தேவனின் குரலைக் கேட்பதற்கு முன்நிபந்தனைகள் என்ன?
- ஆசை/ தாகம்/எதிர்பார்ப்பு.
பைபிள் முழுவதிலும் தேவன் தேவபக்தியற்றவர்களிடம் கூட பேசினார்:
தன் சகோதரனைக் கொன்ற காயீன் (ஆதியாகமம் 4),
வேறொருவரின் மனைவியைக் கடத்திய அபிமெலேக் (ஆதியாகமம் 20),
வரவிருக்கும் பஞ்சத்தைப் பற்றி கடவுள் பார்வோனுக்கு ஒரு கனவில் வெளிப்படுத்தினார் (ஆதியாகமம் 41),
தேவன் கிதியோனைப் பற்றி மீதியானியப் படைவீரனுக்கு கனவில் வெளிப்படுத்தினார் (நியாயாதிபதி 7:13) முதலியன…
தம்மிடமிருந்து வெகு தொலைவில் இருந்த இவர்களிடம் தேவன் பேச முடிந்தால், அவர் தம் மக்களிடம் எவ்வளவு அதிகமாகப் பேசுவார்.
நாம் வாஞ்சையோடு இருந்தால், தேவன் திருப்தி செய்வார்.
- தேவனிடத்தில் அன்புகூறுங்கள்
தம்மை நேசிப்பவர்களுக்கு தேவன் தன்னை வெளிப்படுத்துவார் (யோவான் 14:21). நாம் மற்ற அனைவரையும் விட இறைவனை நேசிப்போமானால், அவருடைய சத்தத்தைக் கேட்கலாம்.
கர்த்தரை நேசித்த மகதலேனா மரியாள், சீக்கிரமே அவருடைய கல்லறைக்குச் சென்றாள், இயேசு கிறிஸ்து அவளுக்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
சீடர் யோவான் இயேசுவுக்கு மிக நெருக்கமாக இருந்தார், இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தார். உயிர்த்தெழுந்த இயேசு தனது சீடர்களிடம் கடல் கரையில் பேசிக் கொண்டிருந்த போது யாராலும் அவரை அடையாளம் காண
முடியவில்லை ஆனால் இறைவன் பேசுகிறார் என்பதை முதலில் உணர்ந்தவர் யோவான்.
- விசுவாசத்தில் கடவுளிடம் கேளுங்கள்.
நாம் தேவனிடம் நம்பிக்கையுடன் கேட்டால் பெறுவோம். என்னைக் கூப்பிடு, நான் உனக்குப் பதிலளிப்பேன் (எரே 33:3) என்பது அவருடைய வாக்குறுதி.
ஆண்டவர் இயேசுவிடம் சீடர்கள் பல கேள்விகளைக் கேட்டார்கள்
ஆண்டவரே ஏன் பேய்களை விரட்ட முடியவில்லை? – மத்தேயு 17:19
ரபி, அவர் ஏன் குருடராகப் பிறந்தார்? – யோவான் 9:2
உங்கள் வருகைக்கும் யுக முடிவுக்கும் அடையாளம் என்ன? – மத்தேயு 24
எலியா முதலில் வரவேண்டும் என்று ஏன் வேதபாரகர் கூறுகிறார்கள்? – மத்தேயு 17:10
எனக்கு எதிராக பாவம் செய்யும் என் சகோதரனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? – மத்தேயு 18:21
அப்படியானால் யார் தான் இரட்சிக்கப்பட முடியும்? – மத்தேயு 19:25
நாங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு உங்களைப் பின்தொடர்ந்தோம். எனவே, எங்களுக்கு என்ன கிடைக்கும்? – மத்தேயு 19:27
அத்திமரம் எப்படி இவ்வளவு சீக்கிரம் காய்ந்தது? – மத்தேயு 21:20
இந்த உவமையின் அர்த்தம் என்ன? – லூக்கா 8:9
ஆண்டவரே ஜெபிக்க கற்றுக்கொடுங்கள். – லூக்கா 11:1
சீடர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயேசு பதிலளித்தார்.
சீடர்கள் எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றால், பல அற்புதமான போதனைகளை நாம் தவறவிடுவோம்.
கேளுங்கள், பெறுவீர்கள் – மத்தேயு 7:7
- கீழ்ப்படிதல்
என் கடிந்துகொள்ளுதலுக்கு நீங்கள் திரும்பினால், இதோ, நான் என் ஆவியை உங்களுக்கு ஊற்றுவேன்; என் வார்த்தைகளை உனக்குத் தெரியப்படுத்துவேன் – நீதிமொழிகள் 1:23.
என் வார்த்தைக்கு நடுங்குகிறவனை நான் பார்ப்பேன் – ஏசாயா 66:2
நாம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால், அவர் பேசுவார். சவுல் மன்னன் கர்த்தருடைய ஆலோசனையை தொடர்ந்து புறக்கணித்தார், ஒரு கட்டத்தில் அவர் கர்த்தருடைய ஆலோசனையைத் தேடிக்கொண்டிருந்தார், ஆனால் கர்த்தர் பதிலளிக்கவில்லை.
- பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுங்கள்.
பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்க்கையை நிரப்ப அனுமதிக்கும் போது, நாம் அவருடைய குரலைக் கேட்போம். கர்த்தராகிய இயேசு ஞானஸ்நானம் எடுத்து ஜெபித்தார், பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல அவர் மீது இறங்கினார், உடனே வானம் திறக்கப்பட்டது, கடவுள் அவருடன் பேசினார்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !
Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

