ஆபகூக் 3:2 ….. கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qQ-S9ILhU-w
நாம் 2023ஆம் வருஷத்தின் நடுவில் நிற்கிறோம். வருஷத்தின் பாதி நாட்கள் கடந்துபோய்விட்டோம். இப்படியிருக்க கர்த்தர் சொல்லுகிறார் வருஷங்களின் நடுவிலே என்னுடைய கிரியைகளை உங்கள் வாழ்க்கையில் நான் உயிர்ப்பிப்பேன் என்று. மிகுதியான மாதங்கள் எப்படி கடந்து செல்லப்போகிறதோ என்று கவலையோடு இருப்பவர்களுக்கு கர்த்தர் சொல்லுகிறார் அவருடைய கிரியைகளை (Works) கர்த்தர் உயிர்ப்பிப்பர். கன்னியாகுமரியிலிருந்து சென்னை போகும் பேருந்தில் ஏறினாள், சாதாரண பேருந்து ஓட்டுனரே, போகிற வழியில் மதுரையிலோ திருச்சியிலோ இறக்கிவிட நினைப்பதில்லை. அதுபோல தான் உங்கள் வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் உங்களோடு பயணம் செய்பவர் மாத்திரமல்ல, உங்களை நடத்துகிறவர், உங்களை அழைத்தவர், உங்களை உணர்த்துபவர், உங்களை பரிசுத்தம் செய்பவர், வேறு எந்த நபருமல்ல, மாறாக, உங்களுடைய பரிசுத்த ஆவியானவராய் காணப்படுகிறார். பரிசுத்த ஆவியாகிய அவர் உங்களை பாதியிலே இறக்கிவிடுவதில்லை. முழுவதுமாக ஜெயத்துடன் ஓடி முடிக்க கர்த்தருடைய கிரியைகள் உங்கள் வாழ்க்கையில் விளங்கும்.
இந்நாட்களில் கர்த்தரை பார்த்து சொல்லுங்கள், ஆண்டவரே என்னை உயிர்ப்பியும், என்னுடைய வாழ்க்கையில் உம்முடைய கிரியைகள் விழுங்கும்படியாக உயிப்பியும் என்று சொல்லுங்கள். சங்கீதக்காரர்கள் இப்படியாக சொல்லி ஜெபித்தார்கள்: எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம் (சங் 80:18) என்பதாக. மாத்திரமல்ல, வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும் (சங் 119:25) என்றும், உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும் (சங் 119:37) என்றும், உமது நீதியால் என்னை உயிர்ப்பியும் (சங் 119:40) என்றும், உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும் ( சங் 119:88) என்றும், உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும் (சங் 119:149) என்றும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும் (சங் 119:154) என்றும், உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும் (சங் 119:156) என்றும், உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும் (சங் 143:11) என்றும் சொன்ன சங்கீதக்காரனை போல நாமும் கர்த்தர் நம்மை உயிப்பிக்கவேண்டும், நம்முடைய வாழ்க்கையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறவர்களாக காணப்படுவோம். அப்பொழுது, நிச்சயமாகவே கர்த்தருடைய கிரியைகளை இந்த மாதத்தில் கர்த்தர் உயிப்பிப்பார்.
மாத்திரமல்ல, கர்த்தருடைய கிரியைகளை இந்த மாதத்தில் காணும்படி, விளங்கச்செய்யும்படி கர்த்தர் செய்வார். மலைகளை பெயர்க்கத்தக்க விசுவாசம் உங்கள் ஒவ்வொருவருக்கும் காணப்படட்டும். கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்வார் என்ற அசைக்கமுடியாத விசுவாசத்துடன் இருங்கள். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை கர்த்தர் வாய்க்கச்செய்வார்; காரிய சித்தி உண்டாகும், கையிட்டு செய்யும் வேலையை கர்த்தர் ஆசீர்வதிப்பார். எந்தெந்த காரியத்திற்க்காக காத்திருக்கிறீர்களோ, அந்த காரியத்தில் பரலோகத்தின் தேவன் காரியத்தை இந்த ஜூன் மாதத்தில் கைகூடிவரப்பண்ணுவார். தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றினார் என்பதை இன்றும் அவருடைய கிரியைகளை, படைப்புகள் அனைத்தும் அறிவிக்கிறது. அதுபோல உங்கள் வாழ்க்கையில் கர்த்தரின் கிரியைகள் அனைத்தையும் நீங்கள் பார்ப்பீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org