எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்துப்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்தி சொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம் (கொலோ. 1:28).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/moKzOUYMgDo
அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசே சபையை ஸ்தாபித்ததின் நோக்கம் என்னவென்றால் அங்கே காணப்படுகிற விசுவாசிகள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவர்களாய் காணப்படவேண்டும் என்பதற்காக. கிறிஸ்துவின் சாயலையும் சுபாவத்தையும் கற்று, அந்த சாயலுக்கு ஒப்பாக மாறவேண்டும் என்பதுதான் தேறினவர்கள் என்பதின் அர்த்தமாகும். பூமியில் இந்நாட்களில் காணப்படுகிற எல்லா சபைகளின் நோக்கமும் விசுவாசிகளைக் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவர்களாய் நிறுத்தவேண்டும் என்பதாய் காணப்படவேண்டும். இவைகள் குறுகிய நாட்களில் வருவதில்லை, வாழ்க்கையின் கடைசி மட்டும் நமக்குள்ளாய் வருகிற மாற்றமாகும். நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன் (பிலி. 3:12) என்பது அப்போஸ்தலனாகிய பவுலின் அறிக்கையாகும். தேறினவர்கள் யாவரும் குருவைப் போலிப்பார்கள் என்று வேதம் கூறுகிறது. பிதா பூரணசற்குணராய் காணப்படுவது நீங்களும் பூரண சற்குண ராய் காணப்படுங்கள் என்பது இயேசுவின் போதனையாகும். வேதவாக்கியங்களைக் கர்த்தர் கொடுத்திருப்பதின் நோக்கமும் தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. ஆவியானவரும் கர்த்தருடைய மகிமையைக் வேதவார்த்தையாகிய கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடையும்படிக்குச் செய்து நம்மை மறுரூபப்படுத்துகிறார்.
கர்த்தருடைய ஜனங்களும் ஆண்டவருக்குள் தேறினவர்களாய் காணப்படும் படிக்கு விரும்பி அதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். பாலுண்ணுகிற ஒரு பாலகனைப் போல எந்நாளும் காணப்படுவதை விரும்பாமல் திடமான ஆகாரத்தை உட்கொள்ளுகிற பாத்திரங்களாய் மாறவேண்டும். எஸ்றா வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், உபதேசிக்கவும் தீர்மானம் எடுத்ததினால் நியாயப்பிரமாணத்தில் தேறின வேதபாரகனாய் காணப்பட்டான். தாவீது வனாந்திரத்தில் இசைகருவிகளை வாசித்து, சங்கீதங்களைப் பாடி கர்த்தரைத் துதிக்கிறவனாய் காணப்பட்டதினால், வாசிப்பதில் தேறினவனாய் காணப்பட்டான் என்று வேதம் கூறுகிறது. பவுல், சவுலாகக் காணப்பட்ட வேளையில், என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்தி வைராக்கியமுள்ளவனாயிருந்தேன் என்று தன்னைப் பற்றி சாட்சி கூறினான். கர்த்தருடைய பிள்ளைகளின் மேலோட்டமான கிறிஸ்தவ ஜீவியம்தான் அனேக வேளைகளில் வஞ்சிக்கப்படுவதற்குக் காரணமாயிருக்கிறது. ஆகையால் இந்நாட்களில் ஆழத்தின் அனுபவத்திற்கு நேராகக் கடந்துசெல்லுங்கள். பரலோகத்தின் தேவன் உங்களில் ஒரு மாற்றத்தையும், வளர்ச்சியையும் காண விரும்புகிறார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar