ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். (எபிரேயர் 12 : 1)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NyXqDXXnCmw
நோவாவின் காலத்தில், மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினதென்றும், அவன் இருதயத்தின் நினைவுகள் எல்லாம் பொல்லாததென்றும் கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், நிக்கிரகம்பண்ணுவேன் என்றார். நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். எனவே, தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது. அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது. நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன். நீ கொப்பேர் மரத்தால் ஒரு பேழையை உண்டாக்கு என்றார். கர்த்தருடைய வார்த்தையின்படியே நோவா பேழையை உண்டு பண்ணினார் (ஆதியாகமம் 6).
நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள். ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. பேழையானது ஜலத்தின்மேல் மிதந்தது. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின. நோவாவும் அவரோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன (ஆதியாகமம் 7).
இந்த நாட்களில் நாமும் நம்முடைய வழிகளையும், இருதயத்தின் நினைவுகளையும் ஆராய்ந்து பார்த்து கர்த்தர் அண்டை திரும்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கடைசி காலத்தின் அடையாளங்களை குறித்து வேதத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்து வார்த்தைகளும் ஒரு உறுப்பு மாறாமல் நிறைவேறிக்கொண்டிருக்கின்றது (மத்தேயு 24). இதை அறிந்தவர்களாகிய நாம் கிறிஸ்துவாகிய பேழைக்குள் வந்திடுவோம். பரலோகராஜ்யத்தில் பங்கடைவோம்.
அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதுபோல…
பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுவோம். 1 கொரிந்தியர் 9 : 24
விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுவோம். 2 தீமோத்தேயு 4 : 7
நீதியின் கிரீடத்தை சுதந்தரிப்போம். 2 தீமோத்தேயு 4:8
கர்த்தர் தாமே நம் அனைவரோடும்கூட எப்பொழுதும் இருப்பாராக.
ஆமென்.
Sam David
Word of God Church
Doha – Qatar
www.wogim.org