கர்த்தாவே நான் உமது அடியேன் (Lord, I am your Servant).

உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. …. நான் உமது அடியேன். (சங் 143:10,12)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/kNB6l2D-lNY

இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகிக்கப்பட்ட தாவீது , தன்னை உருவாக்கிய கர்த்தரை நோக்கி நான் உமது அடியேன் என்று அறிக்கையிடுகிறான். அதுபோல அநேக பரிசுத்தவான்களும் கர்த்தருக்கு முன்பாக தங்களை “உமது அடியேன்” என்று அறிக்கை பண்ணுவதை வேதத்தில் வாசிக்க முடியும். உதாரணமாக ஆபிரகாம், மோசே, சாமுவேல் etc.

ஆம் நாம் அனைவரும் அவருடைய சாயலில், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டவர்கள். இதை நம்புகிற அனைவரும் கர்த்தரின் அடியார்களே. ஆனால் நாமும் தாவீதைப்போல் கர்த்தாவே நான் உமது அடியேன் “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.” (சங் 143:10) என்று சொல்ல,அர்ப்பணிக்க முடியுமா?

சங்கீதம் 143ஐ முழுவதுமாக வாசிக்கும்போது, எப்படிப்பட்ட சூழ்நிலையில் தாவீது இருக்கிறான் என்பதையும், அவன் கர்த்தரை நோக்கி கெஞ்சுவதையும் வாசிக்க முடியும். சத்துரு என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான். என் ஆவி என்னில் தியங்குகிறது. என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. என் ஆவி தொய்ந்துபோகிறது. என்று தாவீது புலம்புவதை வாசகிக்க முடியும். இந்த சூழ்நிலையில் தான், நான் உமது அடியேன்! உமக்கு பிரியமானதை செய்ய வேண்டும்! என்று கர்த்தரிடம் சொல்லுகிறான்.

கர்த்தருக்கு பிரியமானதை செய்யவேண்டுமெனில் அவருடைய வழியை அறியவேண்டியது அவசியமாயிருந்தது. அவருடைய வழியை அறிய வேண்டுமெனில் அவன் உயிர்பிக்கப்பட வேண்டியதாயிருந்தது. சத்துரு தாவீதின் இருதயத்தை உலர்ந்த நிலைக்குள்ளாகவும், சோர்வுக்குள்ளாகவும் கொண்டு சென்ற அந்த சூழ்நிலையில், கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும் என்று வேண்டுகிறார்.

சூழ்நிலைகள் நமக்கு எதிராக இருக்கிறதா? கர்த்தருக்கு பிரியமானதை செய்ய முடியாதபடி தடைகள் சத்துக்கள் மூலம் வருகிறதா? தாவீதை போல் சூழ்நிலைகளை மாற்றும் கர்த்தரை நோக்கி ஜெப்பிபோம். தாவீது, தேவனாலே அழைப்பைப் பெற்றவன், யுத்தவீரன், அபிஷேகம் பெற்ற ராஜா, தேவனுடைய தீர்க்கதரிசி சேனைகளின் கர்த்தரின் துதிகளை சொல்லும் சங்கீதக்காரன். அவனுக்கு எப்படிப்பட்ட தகுதிகள் இருந்தாலும், எதிரிகள் அவனை பின் தொடர்ந்து வரும் போது, கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்த்தி அவருடைய முகத்தை நோக்கிப்பார்க்கும் அனுபவம் பெற்றவனாயிருந்தான். அதுவே அவனுடைய வெற்றியின் இரகசியமாக மாறியது.

தாவீதைப்போல் நம்முடைய கைகளை கர்த்தருக்கு நேராக விரித்து, கர்த்தரையே புகலிடமாகக் கொண்டு,” உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக” என்று ஜெபிக்கும் போது, கர்த்தர் நம்மை உயிர்பித்து, அவருடைய நீதியின்படி நம் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கி, அவருடைய கிருபையின்படி நம் சத்துருக்களை அழித்து, நம் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணுவார். பின் வரும் சங்கீதங்களில் தாவீது கர்த்தரை துதித்ததுபோல நம்முடைய ஜெபங்களையும் கேட்டு அவரை துதிக்கச்செய்வாராக

நெகேமியா 1:11 ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நெகேமியாவின் ஜெபத்தை கேட்ட தேவன், நம் அனைவரின் ஜெபத்தையும் கேட்பாராக. ஆமென்.

Bro. John Finny
Word of God Church
Doha – Qatar
www.wogim.org