லுக் 7:47,48…இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி; அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/q6-ICCDWj60
சிலர் சமூக வலைத்தளமாகிய WhatsAppல் நான் என்னுடைய குடும்பத்தை நேசிக்கிறேன் என்று போடுவார்கள். நான் என் மனைவியை நேசிக்கிறேன் என்றோ, நான் என் கணவனை நேசிக்கிறேன் என்றோ போட்டுக்கொள்வார்கள். குறிப்பாக புதிதாக திருமணமானவவர்கள், மனைவியின் பிறந்தநாளுக்கோ, இல்லை தங்கள் திருமண நாளுக்கோ மனைவியை திருதிப்படுத்துவதற்காகவே, சமூக வலைதளங்களில் நான் உன்னை நேசிக்கிறேன் என்றோ, நீ என்னுடைய சரியான வாழ்க்கை துணை என்றோ போட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். ஆனால் அவையெல்லாவற்றிலும் மேலான அன்பு இயேசு நம் மீது கொண்ட அன்பே ஆகும். காரணம் அவர் நம்முடைய எல்லா பாவங்களையும் மன்னித்துவிட்டார்.
ஒரு வகுப்பறையில் இரண்டு பள்ளி மாணவர்கள் கணக்கு பாடத்தில் தேர்ச்சியடையாமல் தோல்வி அடைந்தார்கள். ஒருவன் சற்றே இரண்டு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தான். மற்றவன் சுமார் பத்து மதிப்பெண்களில் தோல்வி அடைந்தான். கருணை மிகுந்த ஆசிரியர், இரண்டு பேருக்கும் உதவி செய்து தேர்ச்சி அடையும்படி செய்தார். நிச்சயமாகவே பத்து மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மாணவன், அடுத்த முறை இந்த ஆசிரியருக்காகவே நன்றாக படித்து தேர்ச்சி அடைகிறவனாய் காணப்பட்டான். அந்த ஆசிரியர் மீது அவன் அன்பும் மதிப்பும் வைத்திருந்தான்.
அதுபோல தான், ஒரு ஸ்த்ரீ இயேசுவின் பாதத்தை கண்ணீரால் கழுவி, அவர் பாதத்தை துடைத்து, தன் தலை மயிரினால் அவர் பாதங்களை துடைத்தாள். சீமோன் என்பவன், இவள் பாவியான ஸ்த்ரீ என்று மனதில் நினைத்தான், இயேசுவம் உண்மையான தீர்க்கதரிசி என்றால், அவரும் அறிவார் என்றான். இயேசு அவனிடம் சொன்னார் இரண்டு பேர் ஒருவனுக்கு கடன்பட்டிருந்தார்கள். ஒருவன் ஐந்நூறு ரூபாய்க்கும், மற்றொருவன் ஐம்பது ரூபாய்க்கும். இரண்டு பேருடைய கடனையும் எஜமான் மன்னித்துவிட்டான். இவர்களில் யார் அதிகமாய் அன்பு கூறுவான் என்று இயேசு கேட்டார். சீமோன் சொன்னான், ஐந்நூறு ரூபாய் வாங்கியவன் தான் அதிகமாய் அன்பு கூறுவான் என்று.
அதுபோல தான், நாமெல்லாரும் ஐந்நூறு ரூபாய் கடன் வாங்கியவர்களுக்கு ஒப்பாய், அநேக பாவ கடன்களை நம்முடைய தோழில் பாரங்களாக சுமந்து நின்றோம். இயேசு நம்முடைய எல்லா பாவ கடன்களையும் மன்னித்துவிட்டார். இயேசு உங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார், மன்னித்துவிட்டார் என்ற மேன்மையை உணர்ந்தவர்களாக நீங்கள் இருப்பீர்களென்றால், நிச்சயமாகவே, இயேசுவின் மீது வைத்த அன்பினிமித்தம் நீங்கள் அவருக்காக அதிகமாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். இயேசு உங்களுக்கு கொடுத்த அதிகமான மன்னிப்பு, உங்களை அவர் மீது அதிகமாக அன்பு கொள்ளும்படி செய்யட்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org