லுக் 14:33. அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RPwN-YYnWDU
லூக்கா 14வது அதிகாரத்தில் சீஷனாய் இருப்பதற்கு மூன்று தகுதிகள் எழுதப்பட்டிருக்கிறது. அதில் மூன்றாவதாக குறிப்பிட்டிருப்பது தான் மேற்குறிப்பிட்ட வசனமாய் காணப்படுகிறது.
உங்களுக்கென்று வீடோ, காரோ, சொத்தோ இருந்தால், அது என்னுடையது ,என்னால் வந்தது, இது தான் என் வாழ்க்கை என்று சொல்பவர்கள் இயேசுவின் சீஷர்கள் அல்ல. கர்த்தர் உங்களுக்கு கொடுத்த வீட்டில் நான் இலவசமாக இருக்கிறேன் என்று சொல்வீர்களென்றால், நீங்கள் தான் இயேசுவின் சீஷர்கள். கர்த்தர் எனக்கு கொடுத்த எல்லாவற்றிலும் அவரை மகிமைபடுத்துவேன், அவருடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட என் வீட்டை திறந்து கொடுப்பேன். கர்த்தர் எனக்கு கொடுத்த வாகனத்தில், ஆலயத்துக்கு நபர்களை அழைத்துக்கொண்டு வருவேன் என்று சொல்பவர்கள் தான் இயேசுவின் சீஷர்கள்.
ஐஸ்வரியவன் ஒருவனுக்கு தன்னுடைய சொத்தை விற்று பிச்சைகொடுக்க அவனுக்கு மனமில்லாமல் இருந்தது. காரணம் அவன் அழிந்து போகும் உலக பொருட்களின் மீது தன் கண்ணை வைத்திருந்தான். இயேசு சொன்னார் ஒட்டகமானது ஊசியின் காதில் போவது கூட எளியது, ஆனால், ஐசுவரியவன் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்பதாக. அழிந்துபோகும் உலக பொருட்களின் மேல் நாம் நாட்டம் வைக்கிறவர்களாய் காணப்படலாகாது. Father Berchmans இப்படியாக பாடுவார்கள் பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா, போச்சடா உன் அபிஷேகம், ஆடை மேல கண் போச்சுன்னா அம்போ தான் உன் அபிஷேகம் என்பதாக. தேவைக்கு அதிகமாக ஆடைகளை வாங்கி, அதின் மேல் அதிக மோகம் கொள்ளாமல் உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள்.
மற்றவர்கள் வாங்கின ஆடை போல வாங்க வேண்டும், மற்றவர்கள் கட்டின வீட்டை போல கட்ட வேண்டும், மற்றவர்கள் வாங்கின வாகனத்தை போல வாங்க வேண்டும் என்று உங்கள் ஆசை, பொருட்கள் மீது இருக்கலாகாது. அவைகளை வெறுக்க கற்று கொள்ளுங்கள். பவுலை போல எல்லா சூழ்நிலையிலும் வாழ கற்றுக்கொள்ளுங்கள். நான் வாழ்ந்திருக்கவும் தெரியும், தாழ்ந்திருக்கவும் தெரியும் என்று பவுல் சொல்லுவான். மாத்திரமல்ல, மனரம்மியமாக வாழ கற்றுக்கொண்டவன். அதுபோல எல்லா சூழ்நிலையிலும் கிறிஸ்துவின் சீஷர்களாக பிரதிபலிக்க, உங்களுக்கு உண்டாவனவைகள் மீது நாட்டம் கொள்ளாமல் இருங்கள். பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்துவையுங்கள். அங்கே பூச்சியும் இல்லை துருவும் இல்லை.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org