நல்ல தேசத்துக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும் (Praise the Lord your God for the good land).

உபாகமம் 8:10 ஆகையால், நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qSG_etfsu8k

இந்திய தேசத்தின் சுதந்திர நாளை நினைவுகூருகிற இந்நாளில் கர்த்தர் கொடுத்த நல்ல தேசத்திற்காக நன்றி தெரிவிக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.

இந்த வார்த்தைகள் மோசேயின் உதடுகளிலிருந்து வந்தவைகள். தேவன் அவர்களுக்கு வாக்குறுதியளித்த கானான் தேசத்துக்குள் நுழையவிருந்தபோது இஸ்ரவேல் மக்களிடம் பேசினார். எகிப்தில் அடிமைத்தனத்தின் துயரத்திலிருந்து அவர்களை வெளியேற்றவும், பாலும் தேனும் ஓடுகிற ஒரு கானான் தேசத்திற்கு அவர்களை வழிநடத்தவும் ஆண்டவரிடமிருந்து அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி தான் மோசே.

ஆண்டவர் சொன்னார் உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக என்பதாக. ஆம் நாமும் இந்த வருடம் முழுவதும் கர்த்தர் நடத்திக்கொண்டு வந்த வழிகளை நினைத்துப்பார்க்க வேண்டும். இயற்க்கை சீற்றங்களாகிய புயலும் மழையும் வந்த நேரங்களிலும், பெரிய வனங்களில் தீ பற்றி எரிந்தபோதும், வேதியியல் கிடங்குகள் வெடித்தபோதிலும், அநேக இடங்களில் வெள்ளங்கள் வந்தபோதிலும், எரிமலை வெடித்தபோதும், நிலச்சரிவுகள் வந்தபோதும் கர்த்தர் இம்மட்டும் நம் ஒவ்வொருவரையும் உயிரோடு வைத்திருப்பதை நினைப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார். நினைத்து நன்றி சொல்ல கடமைப்பட்டவர்களாய் நாம் காணப்படுகிறோம்.

நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார் என்றும் கர்த்தர் சொல்லுகிறார். இந்த வருடம் முழுவதும் ஒரு தகப்பன் தன பிள்ளையை தோலின் மீது சுமந்து செல்வதை போல உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் சுமந்துகொண்டு போனார்.

இப்படி திருப்தியாக உங்களை வைத்து ஒரு நல்ல தேசத்தையும் கொடுத்து, பராமரித்து வந்த தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். நீங்கள் வாழுகிற தேசம் கோடான கோடி ஜனங்கள் வாழுகிறதை காட்டிலும் நல்ல தேசம். கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தாய் நாடும், நீங்கள் வேலை நிமித்தமாக கடந்துசென்ற நாடும் ஆசீர்வாதமான தேசங்கள். ஆண்டவர் உங்களுக்கு கொடுத்த அந்த நல்ல தேசத்திற்க்காக கர்த்தரை நோக்கி பார்த்து ஸ்தோத்திரம் செலுத்துங்கள்.

ஸ்தோத்திரம் செலுத்துகிறவன் பிதாவை மகிமைபடுத்துகிறான் என்று வசனம் சொல்லுகிறது. பிதாவை மகிமைபடுத்தவேண்டும் என்ற உள்ளம் கொண்டவன் ஸ்தோத்திரம் செலுத்துவான். அவரை மகிமை படுத்தவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிற மேட்டிமையுள்ள பெருநெஞ்சமுள்ளவன் ஸ்தோத்திரம் செலுத்த மறுதலித்துவிடுவான்.

சங்கீதம் 107:22 ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக என்ற வசனத்தின்படி கர்த்தர் கொடுத்த நம்முடைய தேசத்திற்காக அவரை ஸ்தோத்தரியுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org