உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள் (How blessed are your people!)

உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள், எப்போதும் உமக்கு முன்பாக நின்று,      உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள் (2 நாளா. 9:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zX-0xJyWsyQ

சாலொமோனைக் கர்த்தர் ஞானத்தினாலும்,      ஐசுவரியத்தினாலும் அதிகமாய் ஆசீர்வதித்தார். அதைக் கேள்விப்பட்ட பூமியின் ராஜாக்களும்,      அதிபதிகளும் அவனுடைய  முகதரிசனத்தைத் தேடி  எருசலேமிற்கு வந்தார்கள்.  சேபாவின் ராஜஸ்திரீயும் சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது,      விடுகதைகளினாலே  சாலொமோனைச்  சோதிக்கிறதற்காக,      மிகுந்த பரிவாரத்தோடும்,      கந்தவர்க்கங்களையும்,      மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும்  எருசலேமுக்கு வந்தாள்.  சுமார் ஆயிரத்திஐந்நூறு மைல் தூரம் பிரயாணம் செய்து கடினமான கேள்விகள் மூலம் சாலொமோனை சோதிப்பதற்காக வந்தாள். அவள் கேட்டவைகளையெல்லாம் சாலொமோன் விடுவித்தான்,      அவளுக்கு விடுவிக்காதபடிக்கு  ஒன்றாகிலும்  சாலொமோனுக்கு  மறைபொருளாயிருக்கவில்லை. அவள் சாலொமோனுடைய  அரமனையையும்,       அவன் பந்தியின் போஜன பதார்த்தங்களையும்,      அவன் ஊழியக்காரரின் வீடுகளையும்,      அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும்,      அவர்கள் வஸ்திரங்களையும்,      அவனுடைய பானபாத்திரக்காரரையும்,      அவர்கள் வஸ்திரங்களையும்,      கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,       ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து,      நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று என்றும் உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்,      எப்போதும் உமக்கு முன்பாக நின்று,      உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள் என்றாள்.  உம்மை ராஜாவாயிருக்கும் படிக்கு,       உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்றும் கூறி தேவனையும் மகிமைப் படுத்தினாள்.

கர்த்தருடைய பிள்ளைகளே! சாலொமோனுடைய ஜனங்களே பாக்கியவான்களாய் காணப்படுவார்கள் என்றால் இயேசுவின் பிள்ளைகளாய் காணப்படுகிற நாம் எவ்வளவு பாக்கியவான்களாய் காணப்படுகிறோம். இயேசு சாலொமோனைக் காட்டிலும் பெரியவர்,      அவர் ஞானத்திலும்,      ஐசுவரியத்திலும் பெரியவர். அதை அறிந்த பவுல்,      ஆ! தேவனுடைய ஐசுவரியம்,      ஞானம்,      அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய  நியாயத்தீர்ப்புகள்  அளவிடப்படாதவைகள்,      அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! என்று ரோமர் 11:33ல் எழுதினார். கர்த்தருடைய ஜனங்கள் பாக்கியவான்கள்,      இஸ்ரவேலே,      நீ பாக்கியவான்,      கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே,      உனக்கு ஒப்பானவன் யார்? என்று வேதம் கேட்கிறது.  பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் நம் தேவனாகிய கர்த்தர் நம்மை அவருக்குச்  சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டாரே,      அது பெரிய பாக்கியமாய் காணப்படுகிறது. இயேசுவுக்கு முன்பாக நின்று,      உத்தமமாய்  கர்த்தரைச் சேவிக்கிற நீங்கள் பாக்கியவான்கள்,      அவருடைய ஞானத்தை,      வேதவார்த்தைகள் மூலம் கேட்க ஆவலாய் காணப்படுகிற நீங்கள் பாக்கியவான்கள். அவரை ஆவியோடும்,      உண்மையோடும்  சேவிக்கிற ஊழியக்காரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள். ஆகையால் நாம் இயேசுவின் சந்ததி என்ற உணர்வோடு வாழ்வோம். கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும்  மென்மேலும் ஆசீர்வதித்து பாக்கியவான்களாகவும்,      பாக்கியவதிகளாகவும் மாற்றுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar