ஏன் காணிக்கை கொடுக்க வேண்டும்? (Why do we give offerings?).

அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் (II கொரிந்தியர் 9:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/VPrh0UWALg0

நாம் ஏன் காணிக்கைகளை செலுத்த வேண்டும் என்பது குறித்து 7 காரியங்களை தியானிப்போம்

  1. தேவன் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு:

தேவன் இந்த உலகத்தில் அன்புகூர்ந்து தன்னுடைய ஒரேபேரான குமாரனை தந்தார். – யோவான் 3:16. அன்பு நம்மை கொடுக்க வைக்கும் நாம் எந்த அளவு தேவனில் அன்பு கூறுகிறோம் என்பதை கொடுப்பதின் மூலம் வெளிப்படுத்தலாம்.

  1. தேவனை கனப்படுத்துவது:

உன் பொருளாலும் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு என்று நீதிமொழிகள் 3:9 ஆலோசனை சொல்லுகிறது. நாம் சிறந்ததை கொடுப்பதின் மூலம் தேவனை கனம் பண்ணுகிறோம்.

  1. தேவனே எல்லாவற்றுக்கும் காரணர் என்று அறிக்கையிடுகிறோம்:

இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கு என்று உற்சாகமாய் கொடுத்ததை அறிந்த தாவீது மிகவும் சந்தோஷப்பட்டு ஸ்தோத்தரித்து தேவனிடத்தில் “ இப்படி மனப்பூர்வமாய் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது: உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம் என்று அறிக்கையிட்டார்.
நாம் தேவனுக்கு கொடுக்கும்போது தேவனே நமக்கு சம்பாதிப்பதற்கு உரிய பெலனை தருகிறவர் என்பதை அங்கீகரிக்கிறோம். – உபாகமம் 8:18.

  1. ஆஸ்திகளினால் ஊழியம் செய்தல்:

நாம் கர்த்தருக்கென்று கொடுக்கும் போது நம்முடைய ஆஸ்திகளினால் அவருக்கு ஊழியம் செய்கிறோம். – லூக்கா 8:3

  1. வருங்காலத்திற்கான நல்ல ஆதாரம்:

பூமியில் செய்யப்படும் எந்தவொரு முதலீடும் ஆபத்து நிறைந்தது ஆனால் மிகவும் பத்திரமான லாபமான முதலீடு என்பது பரலோகத்தில் முதலீடு செய்வதே! நாம் தேவனுடைய பணிக்கென்றும், தேவனை உண்மையாய் சேவிக்கும் ஊழியர்களுக்கும், எளிய ஜனங்களுக்கும் செலவு செய்யும் பொழுது அது நமக்கு வருங்காலத்திற்காக நல்ல ஆதாரத்தை பொக்கிஷமாக வைத்துக்கொள்ள ஏதுவாகிறது – 1 தீமோத்தேயு 6:19

  1. நம்மை ஆசீர்வதிப்பதற்கு:

கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்பது இறை வாக்கு – லூக்கா 6:38. நாம் கிறிஸ்துவுக்கென்று இழக்கும்போது இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்கிறோம்.
சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான்: பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். – 2 கொரிந்தியர் 9:6.

  1. பண ஆசையில் இருந்து விடுபட:

நாம் தேவனுக்கு என்று தாராளமாய் கொடுக்கும்போது பண ஆசை என்கிற விக்கிரகத்திலிருந்து விடுபடுகிறோம்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !

Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org