மீகா 7:8 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Mo2QwzbHjNU
இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் சந்துருவை பார்த்து சொல்ல வேண்டிய வார்த்தை நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; காரணம் நீதியின் சூரியன் என்னோடு கூட இருக்கிறார்; அவர் எனக்கு வெளிச்சமாக இருப்பார்.
மல்கியா 4:2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
அநேக நேரங்களில் சத்துரு கொண்டு வருகிற போராட்டங்கள், பாவ உணர்வுகள், வறுமைகள் நம்மை விழத்தள்ளுகிற சூழ்நிலைக்கு நேராக கொண்டுசெல்கிறது. ஆனால், கர்த்தருடைய பிள்ளைகள் ஒருபோதும் சோர்வுற்ற நிலைக்குள்ளாக செல்லக்கூடாது. சந்துருவை பார்த்து கலங்கி, சோர்ந்து அல்லது பயந்து போய்விட வேண்டாம். வசனம் சொல்கிறது, பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடி போய் விடுவான்.
ஒரு சகோதரன் ஒரு முறை மிகவும் வருத்தத்தோடு தனி அறையில் உள்ளம் உடைந்தவனாக ஏன் என்னுடைய வாழ்க்கை பாவம் நிறைந்ததாக இருக்கிறது. நான் ஞானஸ்தானம் எடுத்துவிட்டேன், இரட்சிப்பை பெற்று கொண்டுவிட்டேன். ஆனான் நான் விரும்புகிறதை செய்யமால் வெறுக்கிறதையே செய்கிறேன் என்று யோசித்து கொண்டிருந்தான். வாழ்க்கையில் அவன் செய்த பாவங்கள் அவனை துக்க படுத்திகிறதாக இருந்தது. திடீரென்று ஒரு குரல், மகனே கலங்காதே; நான் நீதியின் சூரியன். உன்னுடைய இருளை இன்று நான் போக்குவேன் என்பதாக. அந்த சகோதரன் ஒரே மகிழ்ச்சியோடு சத்தமிட்டு சந்துருவை பார்த்து சொன்னான்; என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.
பகலில் நாம் சூரியனை பார்த்தால், நம்முடைய கண் கூசும், அதிக நேரம் பார்க்க முடியாது. சூரியனுக்கு முன்னாள் இருள் எல்லாம் போய் விடும். அவர் தன்னுடைய வார்த்தையால் படைத்த சூரியனும், நட்சத்திரங்களும், சந்திரனும் இவ்வளவு வெளிச்சத்தை கொடுக்கும் என்றால், நாம் ஆராதிக்கிற தேவன் எவ்வளவு அதிக வெளிச்சமாக இருப்பார்.ஒவ்வொரு நாளும் நீதியின் சூரியனாம் இயேசுகிறிஸ்துவை தரித்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இருள் மாறிவிடும். நீங்கள் வெளிச்சம் வீசுவீர்கள். பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு வெளிச்சமாகவும் இருப்பீர்கள்.
சங்கீதம் 37:24 அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். சங்கீதம் 91:7 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. நீதிமொழிகள் 24:16 நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
மேற்கண்ட வசனங்களை அறிக்கை இடுங்கள். நீதியின் சூரியன் உங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் வீசச்செய்வர்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Bro. Robert Jegadish
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org