சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள் (சங்கீதம் 129:5).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5o5_mQKr4fQ
சீயோன் என்பது மணவாட்டி சபையையும், சபை மக்களையும் குறிக்கிறது. கர்த்தர் உங்களுக்காக யுத்தவீரனாய் எழுந்தருளி, உங்களுக்காக யுத்தம் செய்யும் போது, உங்களைப் பகைக்கிற எல்லாரும் வெட்கப்படுவார்கள். உங்கள் மேல் பொறாமைக் கொண்டு, காரணமில்லாமல் உங்களை அனேகர் பகைக்கலாம். அப்படிப்பட்டவர்களைக் கர்த்தர் வெட்கம் அடையும் படிக்குச் செய்வார். அகாஸ்வேரு ராஜா, ஆமானை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான். ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள், அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான், ஆனாலும் மொர்தெகாய் தான் யூதனாய் காணப்பட்டதினால் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. ஆமான், மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனாகி, அவனைப் பகைத்தான். ஒரு நாள் ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராத படியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான், அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது. அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது. அப்பொழுது ராஜா, இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள். ராஜா ஆமானை அழைத்து, ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்னசெய்யப்படவேண்டும் என்று கேட்டான், அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம் பண்ண விரும்புவார் என்று தன் மனதிலே நினைத்து, ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால், ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும். அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்,
ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலிலே உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய், நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான். ஆமான், மொர்தெகாய்க்கு அப்படியே செய்தான், கர்த்தர் அவனை வெட்கப்படுத்தினார். மொர்தெகாயின் தலை உயர்த்தப்பட்டது, அவன் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனுமாய் கர்த்தர் அவனை மாற்றினார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு இரங்கி, உங்களுக்குத் தயை செய்யும் காலமும் குறித்த வேளையும் வந்து விட்டது. அவர் உங்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்து உங்கள் தலைகளை உயர்த்துவார். உங்களைப் பகைத்தவர்களை வைத்து, கர்த்தர் உங்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று சொல்லும் படிக்குச் செய்வார். உங்களுக்கு எதிராய் எழும்பினவர்களை நீங்கள் தேடியும் காணாதிருப்பீர்கள். உங்கள் அழிவை எதிர்நோக்கிக் காத்திருந்த உங்கள் பகைவர்கள் அத்தனை பேரையும் வெட்கப்படுத்துவார். தாவீதின் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்தி, அவன்மீதில்; கிரீடம் பூக்கும்படிக்குச் செய்தவர், உங்கள் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்து வித்து, உங்கள் தலைகளில் கிரீடம் பூக்கும் படிக்குச் செய்து, உங்கள் தலைகளை உயர்த்தி, இந்த புதிய மாதம் முழுவதும் ஆசீர்வதித்து நடத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar