எபிரெயர் 1:4 இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/ooRB6cyUg1E
இயேசுவின் நாமம் விசேஷித்த நாமம். ஆங்கிலத்தில் Excellent Name என்று எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் விசேஷித்த நிலை இல்லை என்பது தான் இதன் அர்த்தமாய் காணப்படுகிறது. எப்பொழுது இயேசு விசேஷித்த நாமத்தை சுதந்தரித்து கொண்டாரென்றால், இதற்கு முந்திய வசனம் சொல்லுகிறது, இவர் அவருடைய (பிதாவுடைய) மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார் என்பதாக. இயேசு மனுஷகுமாரனாக இவ்வுலகில் வந்து, பல பாடுகளை சகித்து, சிலுவை பாதையில் தன் ஜீவனை கொடுத்து, பரத்திற்கு ஏறி, பிதாவின் வலதுபாரிசத்தில் உடகார்ந்த பிறகு அவர் விசேஷித்த நாமத்தை சுதந்தரித்துக்கொண்டார். இன்று பல கிறிஸ்தவர்கள் இயேசுவை பாலகனாக, மனிதனாக, படத்தில் பார்ப்பதை போல தங்கள் மனதில் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஜெப வாழ்க்கையில் இயேசு பிதாவின் வலதுபாரிசத்தில், இராஜாதி இராஜாவாக சிங்காசனத்தில் இருக்கிறார் என்ற உணர்வோடு உங்கள் விண்ணப்பங்களை ஏறெடுக்கும்போது, அது மிகவும் வல்லமையாக இருக்கும்.
நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார் (சங் 2:6). இயேசு, இராஜாவாக சிங்காசனத்தில் வீற்றிருப்பதால் அவருடைய நாமம் விசேஷித்த நாமமாய் காணப்படுகிறது. என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார் (சங் 2:8,9). விசேஷித்த நாமத்தையுடைய இயேசுவின் கையில் இருப்புக்கோல் காணப்படுகிறது. பூமியில் இயேசுவின் இராஜ்யத்துக்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் எல்லாரும் குயக்கலத்தைப்போல் அதாவது மண்சட்டியை போல் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பொல்லாத இராஜாக்களை இயேசு தன் கையில் வைத்திருக்கும் இருப்புக்கோலால் அடித்து நொறுக்குவார். உங்கள் சரீரத்தில் இருக்கும் நோய்கள் வியாதிகள் மண்சட்டியை போன்றது, அவைகளை இயேசு தன்னுடைய இருப்புக்கோலால் அடிப்பார். உங்களுக்கு விரோதமாக எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகள் எதிராக வந்தாலும் அது மண்சட்டியை போன்றது, அவைகளை இயேசு இருப்புக்கோலால் அடிப்பார். உங்களுக்கு விரோதமாக செயல்படுகிற பில்லிசூனியன்கள், மந்திரங்கள், சாபங்கள், பாவங்கள், கடன்கள், பாரங்கள், சந்துருவின் சகல கிரியைகளும் சாதாரண மண்சட்டியை போன்றது. அவைகள் எல்லாவற்றையும் இராஜய்யத்தின் செங்கோலை உடைய, பிதாவின் வலதுபாரிசத்தில் இருக்கும், விசேஷித்த நாமத்தை உடைய இயேசு தன்னுடைய இருப்புக்கோலால் உடைப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org