யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை (ஏசா. 44:21).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ekGntOYTDes
கர்த்தர் தம்முடைய ஜனங்களை மறப்பதில்லை. ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை என்பது கர்த்தருடைய வார்த்தை (ஏசா. 49:15). தாய் தன் கர்ப்பத்தின் பாலகனை மறப்பது அரிது. ஒருவேளை அவள் மறந்தால் கூட நான் உன்னை மறப்பதில்லை என்று கர்த்தர் சொல்கிறார். சங்கீதக்காரனாகிய தாவீதும் இதையே சொன்னான் தகப்பனும், தாயும் என்னை கைவிட்டாலும், மறந்தாலும், கர்த்தர் என்னை மறப்பதில்லை. அவர் நம்மை தன் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார். நம்மேல் நினைவாகவே இருக்கிற கர்த்தர்.
நான் உன்னை மறப்பதில்லை என்று சொல்லுகிற மனிதர்கள், ஒருவேளை மறந்துவிடலாம். உறவினர்கள், நண்பர்கள் கூட உன்னை மறந்துவிடலாம். யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தவேளையில் பானபாத்திரக்காரனை பார்த்து நீ வாழ்வடைந்திருக்கும் போது என்னை நினைத்து, என்மேல் தயவு வைத்து, என் காரியங்களை பார்வோனுக்கு அறிவித்து என்னை இந்த காவல் கிடங்கில் இருந்து விடுதலையாக்க உதவிசெய்யவேண்டும் என்று கூறியும், இவ்விடத்தில் காணப்பட நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அறிவித்திருந்தும், பானபாத்திரக்காரன் யோசேப்பை மறந்து போனான். மனுஷன் மறந்து விடலாம், தேவன் உன்னை என்றும் மறப்பதில்லை.
கர்த்தர் நம்மை மறப்பதில்லை என்பதை நம்முடைய நினைவில் கொள்ளவேண்டும். உருவாக்கினவர் ஒருபோதும் மறப்பதில்லை என்ற நம்பிக்கை நமக்குள் எப்பொழுதும் காணப்படவேண்டும். கஷ்டமான சூழ்நிலைகள், போராட்டங்கள், வியாதிகள் வரும்போது, கர்த்தர் உன்னை மறந்துவிட்டார், கைவிட்டு விட்டார் என்று சத்துரு எண்ணத்தூண்டுவான். ஆனால் கர்த்தருடைய அன்பு மாறாதது. அவர் வார்த்தை மாறாதது. அவர் உன்னோடு செய்த உடன்படிக்கை நிலையானது. அவருக்காக நீங்கள் காட்டின அன்பின் பிரயாசத்தை அவர் என்றும் மறப்பதில்லை. அவர் உன்னை ஒருபோதும் மறப்பதில்லை என்று வாக்குகொடுத்திருக்கிறார். உன்னை நினைத்தருளி நிச்சயமாய் ஆசிர்வதிப்பார்.
கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org