தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார் (Luke 17:20-21).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_qYU3fEmrkQ
தேவனுடைய இராஜ்யம் என்பது நிகழ் காலத்தில் தெய்வீக வல்லமை உங்களுடைய வாழ்க்கையில் செயல்படுவது தான் என்பதை தேவ ஜனங்கள் அறிந்து கொள்ளவேண்டும். தேவனுடைய இராஜ்யம் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் ஸ்தாபிக்கப்படுகிறது. தேவனுடைய இராஜ்யம் நல்ல முத்தை தேடி செல்கிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது போன்ற பல உவமைகள் மூலம் இயேசு ஜனங்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தை குறித்து விளக்கி கூறினார். இயேசு மரித்து உயிரோடு எழுந்த பிறகும் கூட அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசினார் (அப் 1:3). பிலிப்பு தேவனுடைய இராஜ்யத்தை குறித்தும் இயேசுவின் நாமத்தை குறித்தும் பிரசங்கித்து போது அநேகர் ஞானஸ்நானம்பெற்றார்கள். எபேசுவிலே பவுல் மூன்று மாதமளவும் தேவனுடைய இராஜ்யத்தை குறித்து சம்பாஷணை பண்ணி புத்தி சொன்னான். இந்த தேவனுடைய இராஜ்யம் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
எப்படி தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்கலாம் என்ற கேள்வி ஒரு வேலை உங்களுக்கு எழக்கூடும். வேதம் சொல்லுகிறது, முதலாவதாக, மனம் திரும்பினால் தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும். காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்று இயேசு சொன்னார் (மாற் 1:15). இரண்டாவதாக, மறுபடியும் பிறந்தால் தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (யோவா 3:3). மூன்றாவதாக, சிறுபிள்ளைகள் போல கள்ளம் கபடம் இல்லாமல் இருந்தால் தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும். சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவைகளைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது (லுக் 18:6) என்று இயேசு கூறினார். அதுபோல இன்னும் அநேக காரியங்கள், ஜெபம் செய்வதால், பலவந்தம் பண்ணுவதால் தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுகிறது என்று வேதம் சொல்லுகிறது. இரண்டு முறை ஜெபித்துவிட்டேன், மூன்று முறை ஜெபித்துவிட்டேன் இன்னும் பதில் வரவில்லை என்று சொல்லி முமுறுக்காமல், பலவந்தம் செய்து, தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்க வேண்டும். இந்த இராஜ்யத்தின் சுவிசேஷம் உலகத்தின் கடைசிபரியந்தம் செல்ல வேண்டும். அதற்காக யாக்கோபை போல போராடி ஜெபியுங்கள். பவுலை போல, பேதுருவை போல மற்றும் பல அப்போஸ்தலர்களை போல செயல்படுங்கள். சோம்பேறி விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. சோம்பேறி குளுருகிறது என்று உழமாட்டான். அறுப்பிலே பிச்சைகேட்டலும் சோம்பேறிக்கு ஒன்றும் கிடையாது. ஆகையால் தேவனுடைய இராஜ்யம் ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் ஸ்தாபிக்கப்பட, சோமபால்களை களைத்து, பலவந்தம் செய்து ஜெபிப்போம், செயல்படுவோம்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org