எல்லாம் மாயை (Everything is meaningless).

பிர 1:2 மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/AAJzF0b1A-4

பிரசங்கி புத்தகத்தில் மாத்திரம் சுமார் 39 முறை மாயை என்ற வார்த்தை வருகிறது. ஒரு குழந்தை ஆவலுடன் ஒரு சாக்லேட் முட்டையைத் தேர்ந்தெடுத்து கவனமாக திறக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன், அந்த குழந்தை அதைக் கடிக்கிறது. ஆனால் இனிப்பு சுவை விரைவில் மங்கிவிடுகிறது. குழந்தை அதை இன்னும் நெருக்கமாகப் பார்க்கும்போது, சாக்லேட் முட்டை வெற்றிடமாக இருப்பதைக் காண்கிறது.
பலரும் அனுபவிக்கும் வாழ்க்கை இதுதான். படிப்பு, உடைமைகள், அனுபவம், அதிகாரம், உயர்வு, பதவி அல்லது இன்பம் போன்ற இனிமையான விஷயங்களைப் பற்றிக்கொள்ளும் அவர்கள் உள்ளே எதையும் காணவில்லை. வாழ்க்கை வெறுமையானது, அர்த்தமற்றது, என்றெண்ணி விரைவில் அவர்கள் விரக்தியில் மூழ்குகிறார்கள்.

சாலொமோன் இந்த மனித சங்கடத்தைப் பற்றி கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பேசினார், இன்றும் நம் காலத்தில் இது பொருத்தமானவையாக காணப்படுகிறது. பிரசங்கி புத்தகமானது, சாலமோனின் எழுதப்பட்ட பிரசங்கம், வாழ்க்கையின் அனுபவங்களின் அடிப்படையில் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் பற்றிய ஒரு காரியத்தை சொல்லுகிறது. சாலொமோன் முயற்சித்த, சோதித்த அல்லது ருசித்த அனைத்தும் எவ்வாறு அர்த்தமற்றவை என்பதை இந்த புத்தகம் விளக்குகின்றது . இந்த வார்த்தைகள், அனைத்தையும் கொண்டிருந்த ஒருவரிடமிருந்து வந்தவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மிகப்பெரிய அறிவு, சக்தி, ஞானம், மற்றும் செல்வம் போன்றவற்றை பயன்படுத்தியபிறகு , சாலொமோன் தனது இறுதி முடிவை சொல்லுகிறார், காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார் (பிர 12:13-14) என்பதாக.

ஆகையால் காண்கிற அனைத்தும் மாயையாக இருக்கிறது, காண்கிற அனைத்தும் ஒரு நாள் அழிந்துபோகும் என்பதை அறிந்து, முதலாவது தேவனுக்கு பயந்து அவருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுப்பதே கர்த்தர் எதிர்பார்க்கும் காரியம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதை தான் யோவானும் சொல்லுகிறார், இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது (வெளி 1:3). கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். எதை இழந்தாலும் கர்த்தருக்கு பயப்படும் பயத்தை இழந்துவிடாதிருங்கள். அவருடைய வார்த்தைக்கு பயந்து கீழ்ப்படியும்போது, பெருவெள்ளம் அடித்தாலும், பெருவெள்ளம் வந்தாலும், அது உங்களை சேதப்படுத்துவதில்லை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org