ஜாமக்காரன்(Watchman):-

ஏசாயா 21:6 ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/erU-NjrYZ_o

ஏசாயாவின் நாட்களில், நகரங்கள் ஜாமக்காரர்களை நம்பியிருந்தன. அவர்கள் நகர சுவர்கள் மற்றும் கோபுரங்களில் நின்று, அவர்களைச் சுற்றியுள்ள நிலைமைகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்தினர். பொதுவாக போரின் போது நகர அதிகாரிகள் நள்ளிரவில் வெளியே சென்று, ஜாமகார்களை பார்த்து, நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? என்று கேட்பார்கள். விஷயங்கள் நன்றாக இருந்தால், எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், மேலும் விஷயங்கள் மோசமாக இருந்தால், வரவிருக்கும் ஆபத்து குறித்து ஜாமக்காரன் எச்சரிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

ஆகையால், ஜாமக்காரன் எப்படி இருக்க வேண்டும்?. தூரத்தில் வருகின்ற சம்பவங்களை பார்க்க தெரிந்தவனாக இருக்க வேண்டும். கண்களை ஏறெடுத்து பார்க்கவேண்டும் (II சாமுவேல் 13:34 ). யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான் (II இராஜாக்கள் 9:17 ). சீன தேசத்தில் கொரோன கிருமி வுஹான் மாநிலத்தில் வந்தவுடன் அதை தூரத்திலிருந்து பார்த்து அறிகிறவர்களாக காணப்பட வேண்டும். அந்த கிருமி வந்துவிட்டது என்று அறிந்துகொண்டால் மட்டும் போதுமா? யெகூவின் கூட்டம் வருகிறதை கண்ட ஜாமக்காரன் அந்த செய்தியை எல்லாருக்கும் தெரிவிப்பவனாக இல்லையென்றால் எல்லாரையும் எச்சரிப்பவனாக காணப்பட்டான். காரியங்களை அறிந்து அதை பிறருக்கு அறிவித்து எச்சரித்து அதற்காக பிரயாசப்படுவனாக காணப்பட வேண்டும்.

அடுத்ததாக, ஒருமுறை பார்த்து, அறிந்து எச்சரித்துவிட்டு அமைதலாகிவிடலாகாது. தொடர்ந்து செய்திகளை சொல்பவனாக காணப்படவேண்டும். யெகூவின் கூட்டம் சமாதானம் செய்கிறார்களா இல்லையா என்பதை தொடர்ந்து பார்த்து செய்தியை சொன்னான் ( 2 ராஜா 9 : 17 – 20 ).

ஜாமக்காரன் காத்திருப்பவனாக காணப்பட வேண்டும். யெகூவின் கூட்டம் வந்தபிறகு அல்ல; வருவதற்குமுன்பாகவே ஆயத்ததோடு காத்திருந்தான்.

ஏசாயாவின் நாட்களில் ஆண்டவர் ஜாமக்காரர்களை நியமித்தார். இன்றும் ஜாமக்காரர்களை தம்முடைய ராஜ்யத்தின்மீது இருக்கும்படி அவர் அழைக்கிறார். ஜாமக்காரரே, நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? என்று நம்மை பார்த்து கேட்கும்போது பின்வாங்கவோ அமைதியாகவோ இருக்கக்கூடாது. நம் தலையை கீழே தொங்கப்போட்டு, யாருக்கும் பயந்து ஆபத்து இல்லை என்று பாசாங்கு செய்ய்பவர்களாக ஜாமக்காரர்களாகிய நாம் இருக்கலாகாது. ராஜாவின் அறைகளுக்குள் கூட தைரியமாக நடந்துகொண்டு, பத்சேபாளுடன் தாவீது செய்த பாவத்தை எதிர்கொண்ட நாத்தான் தீர்க்கதரிசி போல நாம் இருக்க வேண்டும்.

எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது (ஏசாயா 62:6 ) என்ற வசனத்தின் படி எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிற ஜாமக்காரர்களாயிருங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org