மடங்கடிக்கப்பட்ட உங்களை கர்த்தர் தூக்கிவிடுவார்(Lord lifts up all who are bowed down):-

சங் 145:14. கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mqNnC2o8eXw

வாழ்க்கையில் அநேகர் ஒடுக்குகிறதினாலும், சோதனையை கொடுக்கிறதினாலும், துயரங்களை வருவிக்கிரத்தினாலும் ஒருவேளை மடங்கடிக்கப்படுகிற சூழ்நிலையில் நீங்கள் தள்ளப்படலாம். அவமானங்கள், நிந்தைகள் மூலமும் மடங்கடிக்கபட்ட சூழ்நிலை வரலாம். ஆனால் ஒன்று நிச்சயம் மடங்கடிக்கப்பட்ட உங்களை ஆண்டவர் தூக்கிவிடுவார்.

இயேசு ஜெப ஆலயத்திலிருக்கும்போது ஒரு ஸ்திரீயை கண்டார். அந்த ஸ்திரீயால் பதினெட்டு வருஷம் நிமிரமுடியாமல் கூனி குறுகி பெலவீனத்தினால் இருந்தாள். அவளுடைய வாழ்க்கையே மடங்கடிக்கப்பட்டு, குன்றிப்போய் இருந்தது. பலவீனப்படுத்தும் ஆவியினால் அவள் பாதிக்கப்பட்டதினால் வாழ்க்கையில் நிமிர்ந்து பார்க்கக்கூடாத சூழ்நிலை. பதினெட்டு வருடங்களாகியும் யாராலும் அவளை தூக்கி நிமிர்த்த முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவள் தேவாலயத்திற்கு ஒரு நாள் வந்தாள். ஒருவேளை அவள் அன்று தேவாலயத்திற்கு வராமலிருந்தால் இயேசு அவளை பார்த்திருக்கமுடியாது. அன்று இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள் (லுக் 13:12-13).

இப்படித்தான் உங்கள் வாழ்க்கையில் அநேக நாள் அவமானங்களால் மடங்கடிக்கப்பட்ட சூழ்நிலையில் இருக்கலாம். இயேசுவின் ஒரு தொடுதல் உங்களை தலை நிமிரும்படியாக செய்யும். உங்களை பழைய நிலையில் மீண்டுமாக நிறுத்தி உயர்த்திவைப்பார். தலைகுனிந்த சூழ்நிலையை இயேசு மாற்றுவார். எஸ்றாவின் மீது இருந்த தேவகரம் உங்களை தூக்கி நிறுத்தும். ஆணிகள் கடாவப்பட்ட இயேசுவின் கரம் விழுகிற உங்களை தாங்கி மீண்டும் நிறுத்தும். விழுகிற என்னை தூக்கிவிடுவதற்கு யாருமே இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். இயேசு உங்களை தூக்கி நிறுத்துவார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார் என்று வசனம் சொல்லுகிறது (சங் 37:24). உங்களையும் அவருடைய கரத்தினால் தங்குவார். மடங்கடிக்கப்பட்ட சூழ்நிலை உங்களுக்கு மாறும். இயேசுவை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org