எருசலேமிலிருந்து எரிகோ (Jerusalem to Jericho).

லுக் 10:30. இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/LDYAmv2xBjA

நமது ஊர்களில் சில பேருந்துகள் குறிப்பிட்ட ஊர்களின் வழியாக போகும் என்று எழுதியிருப்பார்கள். சில பேருந்துகள் Point to point என்று எழுதியிருப்பார்கள். அதாவது எங்கும் நிர்க்கமால் நேராக செல்லும் என்று எழுதியிருப்பார்கள். அதுபோல ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்கு நேரடியாக செல்லுகிறான். இவன் தேவனுடைய சபையின் ஐக்கியத்திலிருந்து விலகி சென்றவன். எதற்க்காக எரிகோவிற்கு இவ்வளவு வேகமாக கடந்து செல்லுகிறான் என்று தெரியவில்லை.

எருசலேம் என்பது தேவனுடைய சபை. எரிகோ என்பது சபிக்கப்பட்ட உலகம். அவன் கடந்து செல்லுகையில் கள்ளர் கையில் அகப்பட்டான், அதாவது, பிசாசின் கையில் அகப்பட்டான். சபையின் ஐக்கியத்தில் கலந்துகொள்ளாமல் உலக கவலையால் இருப்பவர்களுக்கு நேரிடும் காரியம், அவர்கள் பிசாசின் கையில் சிக்குகிறவர்களாய் காணப்படுவார்கள். அந்த மனுஷனை பிடித்த கள்ளர்கள், அவன் வஸ்திரங்களை உரிந்து கொண்டார்கள். ஒரு விசுவாசியை பிசாசு பிடித்தால், அவர்களுடைய இரட்சிப்பு என்னும் வஸ்திரத்தை அவன் கழட்டிவிடுவான். அடுத்ததாக, அந்த கள்ளர்கள் செய்த காரியம், அந்த மனுஷனை, காயப்படுத்தினார்கள். பிசாசு ஒரு விசுவாசியின் இரட்சிப்பு என்னும் வஸ்திரத்தை கழட்டினால், அவர்களுக்கு வியாதிகளை கொண்டு வந்து அலைக்கழிப்பான். கடைசியில் கள்ளர்கள் அந்த மனுஷனை குற்றுயிராய் விட்டு போனார்கள். பிசாசும் ஒரு மனிதனை பிடித்தால், அவர்களை நடு தெருவுக்கு கொண்டு வந்து விடுவான். ஆகையால் தான் ஒவ்வொருவரும் சபை என்னும் ஐக்கியத்தில் நிலைத்திருக்கிறவர்களாய் காணப்பட வேண்டும். சில அற்ப காரணங்களை சொல்லி, சபை ஐக்கியத்தை விடுகிறவர்களாய் ஒருநாளும் காணப்படலாகாது.

இப்படிப்பட்ட நிலையில் இருப்பர்வர்கள் மீண்டும் புதுப்பிக்கமுடியுமா ? என்று கேட்டால், ஆம் , அவர்கள் மீண்டும் இப்பொழுது புதுப்பிக்கபட முடியும். காரணம் எரிகோவிற்கு கடந்து சென்ற மனுஷன் குற்றுயிராய் கிடந்தான். அவனுக்குள் இன்னும் கொஞ்சம் ஜீவன் இருந்தது. அப்பொழுது நல்ல சமாரியனாகிய இயேசு அவனை பார்த்து மனுதுருகி, எண்ணெய் பூசி மீண்டும் புதுப்பித்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் யாரவது எருசலேம் என்னும் சபையின் ஐக்கியத்தை விட்டு எரிகோ என்னும் சபிக்கப்பட்ட பூமிக்கு நேராக கடந்து சென்றதின் விளைவாக, நான் குற்றுயிராக விடப்பட்டிருக்கிறேன் என்று சொல்லுவீர்களென்றால், நல்ல சமாரியனாக இயேசு மனுதுருகி மீண்டும் உங்களுக்கு இரட்சிப்பு என்னும் வஸ்திரத்தை உடுத்த விருப்பமுள்ளவராய் இருக்கிறார். சபை என்னும் ஐக்கியத்திலிருந்து விலகி பல வாரங்கள், மாதங்கள் ஆனாலும், மீண்டும் சபைக்கு நேராக வந்து விடுங்கள். நல்ல சமாரியனாகிய இயேசு உங்களை இரட்சிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org