ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்(The people all stood up):-

நெகே 8 : 5. எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_yaUplLo2cg

ஜனங்கள் எல்லாரும் எழுந்துநிற்கும் பழக்கத்தை நாம் பள்ளிப்பருவதில்லையே கற்க தொடங்குவதுண்டு. வகுப்பறைக்கு ஆசிரியர் வரும்போது மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதையை செலுத்துவதுண்டு. மற்றுமல்ல, பள்ளியில் நாம் தேசியகீதம் பாடும்போதோ இல்லை தமிழ் தாய் வாழ்த்து பாடும்போதோ எல்லாரும் எழுந்து நின்று மரியாதையுடன் பாடும் வழக்கம் உண்டு.

அதுபோல இங்கே எஸ்றா நியாயப்பிரமான புஸ்தகத்தை அதாவது வேதாகமத்தை திறந்தான். அந்த வேதாகமத்தை திறக்கும்போது அங்கே இருக்கிற ஜனங்கள் எல்லாரும் என்ன செய்கிறார்கள். ஒருவர்கூட தவறாமல் ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றார்கள் என்று வாசிகொம்போது அறிந்துகொள்கிறோம். வேதாகமத்திற்கு அவர்கள் கொடுத்த மரியாதையை சற்றே சிந்தித்து பாருங்கள். எஸ்றா வேதாகமத்தை திறந்தவுடன் ஒருவராலும் அவமரியாதையாக, சோம்பலாக, பயபக்தியில்லாமல், அசதியாக, தரக்குறைவாக நினைத்து ஒருவர்கூட அமர்ந்திருக்கவில்லை; மாறாக ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றார்கள்.

மாத்திரமல்ல, இதே அதிகாரம் நெகே 8 : 3ஐ வாசிக்கும்போது ஜனங்கள் எல்லாரும் என்ன செய்தார்கள் ? வசனம் சொல்கிறது தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள் என்பதாக. வசனத்தை வாசிக்கும்பது காலையிலிருந்து மத்தியானம் வரைக்கும் வாசிக்கும்போது எல்லாரும் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்; ஒருவரும் கவனக்குறைவாக அல்ல; மாறாக கவனமாய் செவிகொடுத்தார்கள்.

நாம் வேதாகமத்துக்கு எவ்வளவு மரியாதையை செலுத்திகிறோம்? அதை கண்ட இடங்களில் வைத்து பின்பு தொலைந்து போன பொருளை போல தேடுகிறோமா? சபையில் வசனம் வாசிக்கும்போது கவனமாய் செவிகொடுக்காமல் , கையில் வைத்திருக்கும் கைபேசியை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோமா? வேதாகமம் தூசிபடும் படியாக அதை மரியாதை குலைச்சலாக்குகிறோமா ? வசனத்தை தேடி வாசிக்காமல், அசட்டையாக கடமைக்கென்று வாசிக்கிறோமா? எப்படி வேதாகமத்திற்கு மரியாதையும் கவனத்தையும் செலுத்திகிறோம் ?

நம்முடைய கையில் இருக்கும் வேதாகமம் எப்படிப்பட்ட புஸ்தகம்? அது சாதாரண புத்தகம் அல்ல. அது பரிசுத்த ஆவியானவரால் எழுதிக்கொடுக்கப்பட்ட, அற்புத விலையேறப்பெற்ற பரிசுத்த வேதாகமம். ஒருகாலத்தில் ஆசாரியர்கள் மாத்திரமே வைத்திருந்த இந்த வேதாகமம் இன்று நம்முடைய ஒவ்வொருவருடைய கையிலும் இருப்பது எவ்வளவு ஆசிர்வாதமான காரியம்?. இந்த வேதாகமத்தை மொழிபெயர்ப்பு செய்யவும், ஜனங்கள் மத்தியில் கொண்டு செல்லவும் பரிசுத்தவான்கள் பட்ட கஷ்டமும் வேதனையும் எவ்வளவு?. இந்த வேதாகமத்தை பத்திரப்படுத்த வேண்டுமென்று ரத்த சாட்சிகளாக மரித்தவர்கள் எத்தனை பேர்? இவை எல்லாவற்றையும் சற்றே சிந்தித்து கையில் இருக்கும் வேதாகமத்தின் மேன்மையை அறிந்தவர்களாக, ஒவ்வொருநாளும் ஒரு தாகத்தோடு, ஆசையோடு, இயேசு என்னோடு பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு, பயபக்தியோடு, மரியாதையோடு வாசிப்பீர்களென்றால் உங்கள் வாழ்க்கை செழிக்கும். கர்த்தருடைய வசனத்தின்படி நீங்கள் ஆசிர்வதிக்கப்படுவீர்கள்.

அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம் (சங்கீ 119 : 72 ) என்ற வசனத்தின்படி பரிசுத்த வேதாகமே உங்களுக்கு எல்லாவற்றிலும் மேலாக இருக்கட்டும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org