…சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன், நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஓன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு மந்தையை மேய்த்து.. (சகரியா 11:7).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qzpjeBQY7Zs
நம்முடைய நல்ல மேய்யப்பனாகிய இயேசு, நம்மை அநுக்கிரகம் என்ற கோலாகிய தேவ தயவினாலும், கிருபையினாலும் மேய்க்கிறவர். நிக்கிரகம் அல்லது அழிவு என்ற கோலைக்குறித்து மற்ற மொழி பெயர்ப்புகளில் ஒன்றிப்பு அல்லது ஐக்கியம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அது நம்முடைய மேய்ப்பனாகிய கிறிஸ்துவோடு நமக்கு காணப்படுகிற ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறது. நாம் இயேசுவோடு கூட ஐக்கியமாய் காணப்படும் போது, அவரோடு கூட நல்ல உறவில் காணப்படும் போது, அவருடைய தயவும் கிருபையும் நம்முடைய வாழ்க்கையில் அதிகமாய் வெளிப்படும் என்பதை அறியமுடிகிறது. தகுதியில்லாதவர்களுக்கு தேவன் அருளும் ஈவுதான் கிருபை. நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள், ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன், ஏசாவையோ நான் வெறுத்தேன் என்று மல்கியா 1:2,3ல் எழுதப்பட்டிருக்கிறது. மூத்தவனாகிய ஏசாவை வெறுத்து இளையவனாகிய யாக்கோபை கர்த்தர் சிநேகித்தார். ஏன் என்று அறிய முடியவில்லை, அது கர்த்தருடைய கிருபையாய் காணப்படுகிறது. யூதேயாவில் அனேக கன்னிகைகள் காணப்பட்டிருந்தும் மரியாளுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது, கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று தேவ தூதன் அவளை வாழ்த்தினான். அதுபோல முட்செடியில் எழுந்தருளுன தேவனுடைய தயவு முற்பிதாவாகிய யோசேப்பிற்கு வெளிப்ட்டது. ஆகையால் அவனுடைய மற்ற சகோதரர்களைப் பார்க்கிலும் அவன் இரட்டிப்பான சுதந்திரத்தைப் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய கண்களில் கிருபையும் தயவும் பெற்ற ஜனங்கள். அவருடைய தயவு ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் வெளிப்பட்டு உங்களை உயர்த்தும். கிறிஸ்துவோடு காணப்படுகிற உறவில் அனுதினமும் வளருங்கள். அவரை அண்டிக்கொண்டிருப்பதே உங்களுக்கு நலமானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மரியாள் தன் நேசரின் பாதத்தில் அமர்;ந்ததைப் போல, சூலமித்தி கிச்சிலி மரமாகிய தன் நேசரின் நிழலில், பிரசன்னத்தில் காணப்பட வாஞ்சித்ததைப் போல, யோவான் இயேசுவின் மார்பில் சாய்ந்திருப்பதையே விரும்பியது போல, மோசே அவருடைய சமூகத்தையே வாஞ்சித்ததைப் போல, நீங்களும் ஆண்டவரோடு எப்பொழுதும் ஐக்கியமாய் காணப்படுங்கள். நானே நல்ல மேய்ப்பன், என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்து எனக்கு பின்செல்லுகிறது என்று ஆண்டவர் கூறினார். அவருடைய சத்தத்தை அறியும் ஜனங்களாக அவருடைய மந்தையில் காணப்படுங்கள். நீங்கள் ஆண்டவரோடு ஐக்கியமாய் ஒன்றித்து காணப்படும் போது, அவருடைய தயவும், இரக்கமும், கிருபையும் உங்கள் வாழ்க்கையில் இன்னும் அதிகமாக வெளிப்படும், கர்த்தர் உங்களை வாலாக்காமல் தலையாக்குவார், நீங்கள் கீழாகாமல் மேலாவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae