இது அநுக்கிரக காலம் (This is an acceptable time).

2 கொரி 6:2. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/o_49UaUoAQs

ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு. நட ஒரு காலமுண்டு, நட்டத்தை பிடுங்க ஒரு காலம் உண்டு. அழ ஒரு காலம் உண்டு, நகைக்கவும் ஒரு காலம் உண்டு. ஆண்டவர் நம்மை பண்படுத்தவும் ஒரு காலத்தை வைத்திருக்கிறார், நம்மை பயன்படுத்தவும் ஒரு காலத்தை வைத்திருக்கிறார். யோசேப்பை ஆண்டவர் வனாந்திரத்தில் பண்படுத்தினார், அரண்மனையில் அவனை பயன்படுத்தினார். ஆனால், மோசேயை ஆண்டவர், அரண்மனையில் பண்படுத்தினார், வனாந்திரத்தில் அவனை பயன்படுத்தினார். ஆகையால் பண்படுத்தும் காலமும் முக்கியம், பயன்படுத்தும் காலமும் முக்கியம். இப்படி கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கும் காலத்தில் அநுக்கிரக காலமும் உண்டு. அநுக்கிரக காலம் என்பது ஒரு குறிப்பிட்ட நாளில், கர்த்தர் உங்களை சந்திக்கும், கடாட்சம்பண்ணும், ஏற்றுக்கொள்ளக்கூடிய குறிக்கப்பட்ட காலமாய் காணப்படுகிறது.

இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, ஒரு கள்ளனை பார்த்து, இன்று நீ என்னோடு பரதீசியில் இருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்று கூறினார் (லுக் 23:43). இயேசு இன்று என்று அவனை பார்த்து கூறின அந்த நாளே, அவனுக்கு அநுக்கிரக காலமாய் இருந்தது. சகேயு என்பவன் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றான். அங்கே நூற்றுக்கணக்கான ஜனங்கள் இயேசுவை சந்திக்க வந்தார்கள். அவர்களுக்கு கிடைக்காத ஒரு சிலாக்கியம் சகேயுவிற்கு கிடைத்தது. இயேசு சகேயுவை பார்த்து நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்று கூறினார். இயேசு சகேயுவை பார்த்து சொன்னார் இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது (லுக் 19:9) என்பதாக. சகேயுவை பார்த்து சொன்ன இன்றைக்கு என்ற அந்த நாள் தான் சகேயுவிற்கு கிடைத்த அநுக்கிரக காலம்.

காலம் பொன் போன்றது என்று தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். ஆண்டவர் நமக்கு கொடுத்த காலம் எல்லாம் நமக்கு நல்ல நாள் தான், எல்லா நாளும் பொன் போன்றது தான். ஆண்டவரும் காலங்களை பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆகையால் ஆண்டவர் கொடுத்த காலத்தை சரியாக நாம் பயன்படுத்த வேண்டும். இப்படியிருக்க, கர்த்தர் உங்களை உயர்த்த, ஆசீர்வதிக்க, நன்மையை கொடுக்க குறிப்பிட்ட காலத்தை வைத்திருக்கிறார். அது தான் அநுக்கிரக காலம். அந்த அநுக்கிரக காலம் உங்கள் வாழ்க்கையில் இப்பொழுதே வந்திருக்கிறது. சீயோனுக்கு தயை செய்யும் காலமும், குறித்த வேளையும் வந்தது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org