ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப்போகக்கடவோம் (எபி.13:13).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/G3p8N9Y3-LU
இயேசு நிந்தைகளை அனுபவித்தவராய் சிலுவையைச் சுமந்து கொண்டு கொல்கொதா என்னும் மலைக்கு நேராய் கடந்து சென்றார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் அவருடைய நிந்தையைச் சுமந்தவர்களாய், அவரோடு உங்களை இணைத்துக் கொண்டு, அடையாளப்படுத்திக் கொண்டு, அவருடைய காயத்தின் தழும்புகளைச் சரீரத்தில் தரித்தவர்களாய் அனுதினமும் வாழும் போது, உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற எல்லா நிந்தைகளையும் கர்த்தர் நீக்கிப் போடுவார். எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பது வருட வனாந்தர பயணத்திற்குப் பின்பு, யோர்தானை தாண்டி இக்கரைப் பட்டார்கள். அங்கே கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்கு புரட்டிப்போட்டேன் என்றார். ஆகையால் அந்த இடம் கில்கால் என்ற பெயரைப் பெற்றது. அதுபோல உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற எல்லா நிந்தைகளையும், அவமானங்களையும் கர்த்தர் புரட்டி போடுவார்.
இயேசுவின் சிலுவைப் பாதை முழுவதும் நிந்தைகளால் நிறைந்திருந்தது. அவருடைய சொந்த யூத ஜனங்கள் அவரை நிந்தித்தார்கள், அவருக்கு மினுக்கான வஸ்திரத்தை உடுத்தி ஏரோதுவும், அவன் போர் சேவகர்களும் அவரை நிந்தித்தார்கள். அவரோடே கூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் மற்றவர்களை ரட்சித்தான், தன்னைக் தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை, இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம், தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்று நிந்தித்த பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர், மூப்பர்களோடு சேர்ந்து அவரை நிந்தித்தார்கள். ஆகையால் நிந்தைகள், அவமானம் என்ன என்பது இயேவுக்கு தெரியும். உலகத்தின் ஜனங்கள் மற்றவர்களை அவமானப்படுத்துவதிலும், நிந்திப்பதிலும் அதிக ஆவலுடையவர்களாய் காணப்படுவார்கள். பிள்ளைகள் இல்லையென்றாலும், சரீரங்களில் குறைகள் என்றாலும், அழகாய் இல்லையென்றாலும், வியாதிகளில் காணப்பட்டாலும் நிந்திப்பார்கள். மற்றவர்களை நிந்திப்பது என்பதில் அலாதி பிரியம் கொண்ட திரளான ஜனங்கள் உண்டு. பெலிஸ்தியனாகிய கோலியாத் நாற்பது நாட்கள் இஸ்ரவேலின் சேனையை நிந்தித்தான். யோபு வேதனையின் பாதையில் சென்ற போது, அவனுக்கு விரோதமாக வாயை விரிவாய்த் திறந்தார்கள் என்றும், அவனைக் கன்னத்தில் அடித்து நிந்தித்தார்கள் என்றும் என்றும் யோபு 16:10ல் எழுதப்பட்டிருக்கிறது. சவுல் ராஜா தாவீதை நிந்தித்தான், அது யோனத்தானுக்கு மனநோவாயிருந்தது என்று 1 சாமு 24:30 கூறுகிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் மோசேயைப் போல கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணி, அவருடைய நாமத்தினிமித்தம் வருகிற நிந்தையை சுமக்க உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது, தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்று சாட்சி கொடுத்த ராகேலைப் போல , உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற எல்லா நிந்தைகளையும் நீக்கி, உங்களை மகிழச் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae