எலியாவும், இயேசுவின் உயிர்த்தெழுதலும் (Elijah and the Resurrection of Jesus).

மத்தேயு 28:6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/k-HINmETwYI

இயேசு தன்னுடைய சீஷர்களிடம், ஜனங்கள் என்னை யாரென்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்தார்கள் (லுக் 9:8). அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள் (லூக்கா 9:19). சிலர் இயேசுவை எலியா என்று சொன்னார்கள் என்று வேத வசனம் கூறுகிறது. ஆனால், இயேசு பழைய ஏற்பாட்டில் நடந்த உயிர்தெழுதல்களை நிரூபிக்கும்படி வந்த தேவனுடைய குமாரன் என்பதை சீஷர்கள் அறிந்துகொண்டார்கள்.

விதவையின் மரித்த மகன் ஒருவனை, எலியா உயிரோடு எழுப்பினார். இஸ்ரவேலருக்குள் அதை போன்ற அற்புதம் அதற்கு முன்பு நடந்ததில்லை. இயேசு இந்த உலகத்திலிருந்த போதும், மரித்துப்போன ஒரு விதவையின் மகனை தொட்டு உயிரோடு எழுப்பினார். எலியா யோர்தான் வழியாக சென்று, பின்பு வெளிப்படையாக பரலோகத்திற்கு ஏறி சென்றார். அதுபோல, இயேசு கல்வாரி என்னும் ஞானஸ்நானத்தின் மூலம் கடந்து சென்று, பின்பு, பலர் பார்த்துக்கொண்டிருக்கையில் பரலோகத்திற்கு கடந்து சென்றார். கல்வாரி என்னும் கடினமான பாதையில் இயேசு கடந்து சென்றதால் தான், இன்று நாம் மீட்பின் அனுபவத்தை பெற்று பரலோக பிரஜைகளாக மாறியிருக்கிறோம்.

எலியா பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, தனது சால்வையை இரண்டு மடங்கு ஆவியோடு கீழே போட்டார். அதை வாஞ்சையோடு பெற்றுக்கொண்ட எலிசா, எலியாவை காட்டிலும் பெரிய அற்புதங்களை செய்தார். அதுபோல தான், இயேசுவும் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, வானத்திற்கு ஏறிப்போனபின்பு, வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருந்த ஜனங்கள், பெந்தேகோஸ்தே நாளின் போது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆவியானவரை பெற்றுக்கொண்டார்கள். அதன்பின்பு, இயேசு செய்த கிரியைகளை காட்டிலும் பெரிதான காரியங்களை சீஷர்கள் செய்தார்கள்.

இயேசுவின் மரணம், அவருடைய உயிர்த்தெழுதலை விசுவாசித்தீர்களென்றால், நீங்களும் பரிசுத்த ஆவியானவரை பெற்றுகொள்ளுவீர்கள். அதன்பின்பு, இயேசுவை காட்டிலும் பெரிதான காரியங்களை செய்யும்படி ஆவியானவர் செய்வார். இயேசுவை உயிரோடு எழுப்பின ஆவியானவருடைய வல்லமை, சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பிக்கும். உங்கள் சாவுக்கேதுவான சூழ்நிலைகள் உயிரடையும். கர்த்தர் திரளான அற்புதங்களை உங்கள் வாழ்க்கையில் செய்வார். எலியா விதவையின் மகனை உயிரோடு எழும்பச்செய்ததுபோல, இயேசுவும் உயிரோடு எழுந்ததுபோல, உங்கள் சூழ்நிலைகளும் உயிரடையும். காரணம், உங்களோடு இருக்கிறவர், என்றென்றும் உயிரோடிருக்கிறவர்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org