எலிசாவின் மரணமும், இயேசுவின் மரணமும் (The death of Elisha and the death of Jesus).

மாற் 15:46. அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/bNz3LwuCEVo

எலிசாவின் மரணத்திற்கும், இயேசுவின் மரணத்திற்கும் ஒரு சில ஒற்றுமைகள் காணப்படுகிறது. எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள் என்று II இராஜா 13:20 கூறுகிறது. இயேசு நமக்காக மரித்தபிறகு, அரிமெத்தேயு ஊரானாகிய யோசேப்பு, இயேசுவின் உடலை பிலாத்துவிடம் வாங்கி, ஒரு கல்லறையில் அடக்கம் பண்ணினான். எலிசாவை போல இயேசுவும் அடக்கம்பண்ணப்பட்டார். அதுபோல மற்றொரு ஒற்றுமை என்னவென்றால், ஒரு மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான் என்று II இராஜா 13:21 கூறுகிறது. அதுபோல, இயேசு தனது மரணத்தின் மூலம், நம்மெல்லாருக்கும் ஜீவனை கொடுத்தார். எலிசா மரணமடைந்த பிறகும் ஒருவன் பிழைத்தான், அதுபோல, இயேசு மரணமடைந்த பிறகும், கோடிக்கணக்கான ஜனங்கள் நித்திய ஜீவனை அடைந்து பிழைக்கிறார்கள்.

இயேசுவின் மரணம், அநேகர் பிழைக்கும்படி செய்தது. நாமெல்லாரும் பிழைத்திருக்கிறோம் என்றால், அது இயேசுவின் மரணத்தினால் பிழைத்திருக்கிறோம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோம 5:7,8). நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று சொன்ன சீஷன், அவன் தன்னுடைய மரணத்தை கண்டு அஞ்சினான். இந்த உலகத்தில் ஒருவரும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை. சீக்கிரமாக, யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், கஷ்டப்படாமல் மரணத்தை சந்திக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். ஆனால், இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தார். கடற்காளானை ருசிபார்த்து அதை விரும்பாமல், மரணத்தை ருசிபார்த்தார். இயேசு சொன்னார், என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது (மத் 26:38) என்பதாக. அவருடைய மரணம் பெரிய துக்கமாக அவருக்கு இருந்தது. அந்த துக்கத்தின் மத்தியிலும் இயேசு தன்னுடைய மரணத்தை, பாவிகளாகிய நமக்காக ருசிபார்த்தார். அப்படிப்பட்ட இயேசுவின் மரணத்தினால், நாம் பிழைத்திருக்கிறோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org