I கொரிந்தியர் 15:12,13 கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/wvQFPRzuWYo
நம்முடைய ஊர்களில் மரித்த நபருக்கு ஏழு ஜென்மம் காணப்படுகிறது என்று சிலர் சொல்லுவார்கள். சிலர் மரித்த தாத்தா காக்காவாக வந்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லி நம்புவார்கள். இப்பொழுது நல்ல காரியம் செய்தால், மரணத்திற்கு பின்பு செல்வந்தரான குடும்பத்தில் பிறக்கலாம் என்று சொல்லும் நபர்களும் உண்டு.
வேதகமத்தின்படி இரண்டு வகையான உயிர்தெழுதல்கள் மாத்திரமே காணப்படுகிறது. ஒன்று நீதிமான்களின் உயிர்த்தெழுதல். மற்றொன்று துன்மார்க்கரின் உயிர்த்தெழுதல். லுக் 14:14ல் இயேசு சொன்னார், நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்பதாக. யோவான் 5:29ன் படி, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. இரண்டாவது வகையான உயிர்த்தெழுதல், துன்மார்க்கரின் உயிர்த்தெழுதல். தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள் என்று யோவா 5:29 கூறுகிறது.
உயிர்த்தெழுதலின் வரிசையில் முதலாவது இயேசு உயிரோடு எழுந்து என்றென்றும் ஜீவிக்கிறவராய் காணப்படுகிறார். அதன் பின்பு, கிறிஸ்துவை உடையவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்று 1 கொரி 15:23 கூறுகிறது. கடைசியாக பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம். நீதிமான்களின் உயிர்ந்தெழுதலின் வரிசையில் நாமெல்லாரும் வந்துவிட வேண்டும். அதையே பவுல் இலக்காக கொண்டு சொல்லுகிறார், இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் என்று பிலி 3:10,11ல் கூறுகிறான்.
பவுலுடைய இலக்கு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாய் காணப்படவேண்டும் என்பதே. நாமும் கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததைப்போல, அவருடைய வரிசையில் எழுந்திருக்க தகுதியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அதற்கேற்ற ஜீவனம் இந்த உலகத்தில் வாழ்கிற நாட்களில் நாம் வாழ வேண்டும். கிறிஸ்து விரும்புகிற பரிசுத்தத்தோடு, கிறிஸ்துவின் சிந்தையை தரித்து வாழ்வோமென்றால், மறுமையில் நாம் இயேசுவோடு நித்திய நித்தியமாக வாழ்வோம். நம்முடைய பார்வையெல்லாம் இம்மைக்கான காரியங்களை பார்க்காமல், நீதிமான்களின் உயிர்த்தெழுதலோடு, நித்தியதை நோக்கி பார்கிறதாய் காணப்படட்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org