லுக் 24 :50,51 பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக் கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Dt-apd07F8k
இயேசு உயிரோடு எழுந்து பரமேறி செல்வதற்கு முன், நாற்பது நாட்களில், பத்து முறை தரிசனமானார்; பத்தாவதாக, ஒலிவமலையில் பதினொருபேருக்கு தரிசனமானார். அப்பொழுது தம்முடைய கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார்.
இயேசு உயோரோடு எழுந்தபிறகு தன்னை நிரபராதி என்றும், தான் சொன்னபடி உயிரோடு எழுந்துவிட்டேன் என்று காண்பிக்கும்படியாகவும், தான் இராஜாதி ராஜாவென்று நிரூபிக்கும்படியாகவும், ஏரோதுவுக்கோ, பிலாத்துவிற்கோ, அன்னாவிற்கோ, காய்பாவிற்கோ போய் தன்னை காண்பிக்கவில்லை. பரிசேயர்கள் சதுசேயர்களுக்கும் கூட போய் தன்னை காண்பிக்கவில்லை. காரணம் அவர் தன்னை நியாயப்படுத்தவேண்டிய அவசியம் அவருக்கு வேண்டியதில்லை.
மெல்க்கிசதேக்கு இயேசுவுக்கு அடையாளம்; அவர் ஆபிரகாமை ஆசீர்வதித்தார். ஆசீர்வதித்தபிறகு ஆபிரகாமிற்கு அவர் மறைந்துபோய்விட்டார். அதுபோல தான் இயேசுவும் தன்னுடைய கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும்போது, சீஷர்களுடைய கண்களுக்கு மறைவாக, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
மெல்க்கிசதேக்கு ஆபிரகாமிற்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து ஆசீர்வதித்தார் (ஆதி 14:18). இது ஆபிரகாமின் பூமிக்குரிய ஆசீர்வாதத்தை குறிக்கிறது. உயிர்த்தெழுந்த இயேசுவும் கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்தபோது உங்கள் ஒவ்வொருவருவருக்கும் இந்த உலகத்திற்குறிய ஆசீர்வாதத்தை கொடுத்துவிட்டு தான் சென்றிருக்கிறார். நீங்கள் அப்பத்துக்காக அழைத்து திரிவதில்லை. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியாய் இருந்தாலும், கர்த்தரை தேடுகிற உங்களுக்கு ஒரு குறைவும் இருப்பதில்லை.
அதுபோல, மெல்க்கிசதேக்கு ஆபிரகாமை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக (ஆதி 14:19) என்று ஆசீர்வதித்தார். உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம், உன்னதத்துக்குரிய ஆசீர்வாதம், ஆவிக்குரிய ஆசீர்வாதமும் ஆபிரகாமிற்கு கிடைத்தது. அதேபோல கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை கொடுத்து மென்மேலும் வல்லமையையும் அபிஷேகத்தையும் பெற்றுக்கொள்ளும்படி செய்வார்.
மாத்திரமல்ல, மெல்க்கிசதேக்கு ஆபிரகாமிடம், உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் (ஆதி 14:20). சாத்தானின் சகல தந்திரங்களையும் நிர்மூலம் பண்ணும் விசேஷித்த பெலன் ஆசீர்வாதத்தை ஆபிரகாம் பெற்றுக்கொண்டான். அதுபோல, நீங்களும் சத்துருவின் மீது ஜெயம்கொண்டு, பரிசுத்தத்தோடு இயேசுவுக்காக உங்கள் வாழ்க்கையை ஓடி முடிக்கும்படி கர்த்தர் செய்வார்.
ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று (கலா 3:14) என்ற வசனத்தின்படி ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து மூலமாக உங்கள் அனைவருக்கும் உண்டாகும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org