என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் (I have all I need here among my own people).

அவன் கேயாசியைப் பார்த்து : இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது  சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள் (2 இரா. 4:13).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mGa6NQwy6Oo

சுனேம் ஊராளாகிய கனம் பொருந்திய ஸ்திரீ, உனக்கு ஏதாவது நன்மைகள் தேவைப்படுகிறதா என்று கேட்ட எலிசா தீர்க்கதரிசியைப் பார்த்து, எனக்கு எல்லாம் காணப்படுகிறது, நான் என் ஜனத்தின் நடுவே   சுகமாய்க் குடியிருக்கிறேன் என்று கூறினாள். அவள் ஐசுவரியமுடையவளாகவும், கனத்திற்குரியவளாகவும் இருந்தும், அவள் வாழ்க்கையில் ஒரு தேவை காணப்பட்டது. அவளுக்குப் பிள்ளைகள் இல்லை, அவள் புருஷனும் வயது சென்றவனாய் காணப்பட்டான். இருந்தாலும் அவளுக்குள் மனரம்மியம் காணப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல் எந்த நிலையில் நான் காணப்பட்டாலும்  மனரம்மியமாயிக்க கற்றுக்கொண்டேன்  என்றதை போல சுனேம் ஊராளாகிய ஸ்திரீக்குள்ளும் காணப்பட்டது. கர்த்தருடைய பிள்ளைகளே, எல்லா ஆசீர்வாதங்களும் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. நில நன்மைகள் கிடைப்பதற்குக் காலதாமதம் கூட ஆகலாம்.   ஆகிலும் விசுவாசத்தில் சோர்ந்து போய் விடாதிருங்கள், பின் மாற்றத்திற்குள் போய்விடாதிருங்கள். ஏன் எனக்கு மட்டும் இப்படியாய் காணப்படுகிறது என்று முறுமுறுத்து விடாதிருங்கள்.

சுனேம் ஊராளாகிய ஸ்திரீ, தன்னுடைய நிந்தைக்குரிய  நிலையிலும், எலிசா தீர்க்கதரிசி ஊழியத்தின் பாதையில் கடந்து வரும் போது அவனுக்கு போஜனம் கொடுக்கிறவளாய் காணப்பட்டாள். ஒருமுறையல்ல, அவன் வருகிற போதெல்லாம் அப்படியாகச் செய்தாள். அத்துடன், அவள் தன் புருஷனோடு பேசி, எலிசா தீர்க்கதரிசிக்கு தன் வீட்டின் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைத்து. அவன்   வரும்போதெல்லாம்  அங்கே தங்க வைக்கிறவளாயும் காணப்பட்டாள். அதினிமித்தம் கர்த்தர் அவளுக்கு அனேக ஆசீர்வாதங்களைக் கொடுத்தார். அவளுக்கு ஒரு குமாரனைக் கொடுத்து அவளை கனம் பண்ணினார். பின்னாட்களில் அவன் மரித்த வேளையில், அவனை மீண்டும் உயிரோடு பெற்றுக் கொண்டாள். தேசத்தில் ஏழு வருஷம் பஞ்சம் வந்த வேளையில் எலிசா தீர்க்கதரிசியின் வார்த்தையின் படி பெலிஸ்தியரின் தேசத்தில் சென்று குடியிருந்து, தன்னையும் தன்குடும்பத்தையும் பஞ்சத்திற்கு தப்புவித்தாள். பஞ்சம் முடிந்து தன் சொந்த தேசத்திற்குத் திரும்பி வந்தபின்பு, தன்னுடைய வீட்டையும் வயலையும் மீண்டும் ராஜாவினிடத்திலிருந்து  திரும்பப்பெறுகிறவளாய் காணப்பட்டாள். கர்த்தருடைய ஊழியனை கனம் பண்ணினவளைக் கர்த்தர் எல்லாவிதங்களிலும் கனம் பண்ணி, அவள் வார்த்தையின் படியே தன் ஜனத்தின் நடுவே   சுகமாய்க் குடியிருக்கும் படிக்குச் செய்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் மனரம்மியமாகவும், ஊழியர்களைக் கனம் பண்ணுகிறவர்களாகவும் காணப்படும் போது, ஒரு கலச குளிர்ந்த தண்ணீரைக் கூட கணக்கில் வைத்து, உங்கள் எல்லாத் தேவைகளையும் சந்தித்து உங்களைக் கனம் பண்ணி ஆசீர்வதிப்பது உறுதி.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae