இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான், தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான் (தானி. 6:3).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qbYny34OMx4
தானியேலுக்குள் விஷேசித்த ஆவி காணப்பட்டது, அதை தரியு ராஜா கவனித்தான். ஆகையால் அவனை தேசாதிபதிகளுக்கு மேலாக உயர்த்தினான். அவனுக்குள்ளிருந்த விஷேசித்த ஆவி அவனை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது. உங்களுக்குள்ளும் இந்த விஷேசித்த ஆவி காணப்படும் போது நீங்களும் ஞானத்திலும், அறிவிலும், சாமர்த்தியத்திலும் தானியேலைப் போல பத்து மடங்கு சமர்த்தர்களாய் இருப்பீர்கள்.
தானியேல் விஷேசித்த ஆவியோடு பிறக்கவில்லை. ஆனால் அதைத் தனக்குள்ளாக உருவாக்கி அதை அபிவிருத்தி செய்கிறவனாய் காணப்பட்டான். அவன் நேபுகாத்நேச்சாருடைய போஜனத்தாலும், பானத்தினாலும் தன்னை தீட்டுப்படுத்துவதில்லை என்ற ஒரு தீர்மானத்தை தன் வாலிப வயதில் எடுத்தான். அவன் தன்னுடைய காரியங்கள் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாய் காணப்பட்டான். அவன் தன் தேவனை இடைவிடாமல் ஆராதிக்கிறவனாய் காணப்பட்டான், தினம் மூன்று வேளைகளில் ஜெபிக்கிறவனாகவும் காணப்பட்டான். பெல்ஷாத்சார் என்ற பாபிலோனிய ராஜாவின் மனைவி அவனைக்குறித்துக் கூறும்போது, தானியேலுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது என்றாள். ஆவியான தேவன் நம்முடைய ஆவி, ஆத்துமா சரீரத்தை ஆட்கொண்டு நம்மை ஆலயமாக்கி நமக்குள் வாசம் பண்ணும் போது நாமும் இந்த விஷேசித்த ஆவி உடையவர்களாய் மாறிவிடுவோம். தானியேல் ஆவியானவரால் ஆக்கிரமிக்கப்பட்டு நடத்தப்பட்டதினால் அவனுடைய குணம் முழுவதுமாய் மாறியது. அதுபோல, கர்த்தருடைய ஆவியானவர் நம்மை ஆலயமாக்கும் போது, நம்முடைய சுபாவங்களில் மாற்றங்கள் வரும்.
தானியேல் விஷேசித்த ஆவி உடையவனாய், பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியம் செய்து, எல்லா காரியத்திலும் உண்மையுள்ளவனாய் காணப்பட்டதினால் மற்றவர்கள் அவன் மேல் பொறாமை கொண்டார்கள். பொறாமைக்கு முன்னிற்கத்தக்கவன் யார்? என்று நீதி. 27:4 கூறுகிறது. ஆகையால் தானியேலில் குற்றம் கண்டுபிடிக்கும் படிக்கு முகாந்தரத்தைத் தேடினார்கள். ஆகிலும் அவனில் எந்த குற்றத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனிமித்தம் முப்பது நாட்கள் தரியுவைத் தவிர வேறு யாரிடமும் எந்த விண்ணப்பமும் வைக்கலாகாது என்று ஒரு சட்டத்தை இயற்றும் படிக்கு தரியூவை ஏவிவிட்டார்கள். சட்டம் இயற்றப்பட்ட பின்பும் தானியேல் தினம் மூன்றுவேளை தன்னுடைய வழக்கத்தின் படியே தேவனிடம் ஜெபிக்கிறவனாய் காணப்பட்டான். ஆகையால் சட்டத்தின்படி ராஜா அவனைச் சிங்கக் கெபியில் போட்டான். சிங்கங்கள் தானியேலை சேதப்படுத்தாத படிக்குக் கர்த்தர் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார். கர்த்தர் அந்த சோதனையையும் சாதனையாய் மாற்றி, அதனிமித்தம் தானியேலின் வாழ்க்கையில் இன்னும் உயர்வைக் கட்டளையிட்டார். கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களோடு கூட ஆவியான தேவன் காணப்படும் போது, நீங்கள் விஷேசித்தவர்களாய் காணப்படுவீர்கள். உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக அவர் உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தம் பண்ணுவார். உங்கள் தலையை உயர்த்தி உங்கள் பாத்திரங்கள் நிரம்பி வழியும் படிக்குச் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae