1 கொரி 7:24 சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/yt09ofAoeW8
நாம் எல்லாரும் அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் பொறுமையோடு ஓட வேண்டும். சிலர் மற்றவர்களை போல நானும் பாடல் பாட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்டவர் அவர்களுக்கு வேறொரு தாலந்தை கொடுத்திருப்பார். நம்முடைய சரீரத்தை கவனித்துப்பாருங்கள். நம்முடைய சரீரம் முழுவதும் கண்களாக இருந்தால் எப்படி இருக்கும்? இல்லையென்றால் நம்முடைய சரீரம் முழுவதும் கால்களாக இருந்தால் எப்படி இருக்கும்?. நம்முடைய சரீரத்திலிருக்கும் ஒவ்வொரு அவயவங்களும் முக்கியமானைவைகள். ஒவ்வொன்றையும் கர்த்தர் ஒரு நோக்கத்தோடு படைத்திருக்கிறார். கண்கள் பார்ப்பதற்க்காகவும், காதுகள் கேட்பதற்காகவும், கால்கள் நடப்பதற்க்காகவும் படைத்திருக்கிறார். அதுபோலத்தான், ஆண்டவர் படைத்த முழு உலகத்தை பாருங்கள். இரவை ஆழ சந்திரனை படைத்தார், பகலை ஆழ சூரியனை படைத்தார். சந்திரனும் சூரியனும் அவைகளுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்கிறது. சந்திரன் சூரியன் செய்யும் வேலையையும், சூரியன் சந்திரன் செய்யும் வேலையையும் மாற்றி செய்ய ஆசைகொள்ளவில்லை. Line of Control என்று சொல்லப்படும் கட்டுப்பாடு கோடு நாட்டின் எல்லைப்பகுதியில் இருக்கும். அதுபோல தான் நம்முடைய அழைப்பிலும் கட்டுப்பாடு கோடு காணப்படவேண்டும்.
ஆகையால், கர்த்தருடைய பிள்ளைகளுக்கென்று ஆண்டவர் குறிப்பிட்ட வேலையை கொடுத்திருப்பார். கர்த்தரின் அழைப்பு நபருக்கு நபர் வேறுபடும். ஆனால் அவருடைய அழைப்பு எல்லாம் கர்த்தரிடம் மாத்திரம் வந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால், கர்த்தர் உங்களுக்கென்று கொடுத்த ஓட்டத்தில் பொறுமையோடு, தைரியத்தோடு, உறுதியோடு ஓடுங்கள். ஓட்டப்பந்தையத்தில் ஓடுகிறவர்களை பார்த்திருக்கிறீர்களா? அவர்களெக்கென்று போடப்பட்ட கோட்டை தாண்டி அவர்கள் ஓடக்கூடாது. அதுபோல ஆண்டவர் உங்களுக்கு சுவிசேஷம் செய்யும் வேலையை கொடுத்திருக்கும்போது, மற்றவர்களை போல நானும் தீர்க்கதரிசனம் கூறுகிறேன் என்று சொல்லக்கூடாது. சகோதரர் தினகரன் அய்யாவைபோல நானும் இயேசு அழைக்கிறார் பாடலை அவர் தொனியில் பாடுவேன் என்று முயற்சிக்கக்கூடாது. கர்த்தருடைய ஊழியமும், அவருடைய இராஜ்ஜியத்திற்கடுத்த பணியும் மிமிக்ரி செய்து விளையாடும் பொழுதுபோக்கு ஸ்தலம் அல்ல. அது பயபக்திக்குரிய ஸ்தலம். அதை கவனத்தோடும், உண்மையோடும் செய்யவேண்டும்.
வேலை ஸ்தலங்களில் அநேக Rules and Regulations இருக்கும். அதின்படி தான் எல்லா ஊழியர்களும் பணிபுரியவேண்டும். அதுபோல தான், கர்த்தருடைய வேதத்தின்படி, உங்களுக்கென்று அழைத்த அழைப்பில் மாத்திரம் உறுதியாய் தரித்திருந்து, உங்கள் ஓட்டத்தை ஓடுங்கள். ஓடுதளம் வெவேறாக இருந்தாலும், நம் எல்லாருக்கும் ஒரே இலக்கு தான். நம்முடைய இலக்கு, நமக்காக ஜீவனை கொடுத்த இயேசு மாத்திரமே. இலக்கு ஒன்றாக இருக்கும்போது, அழைப்பு எதுவாக இருந்தாலும் என்ன!. ஆண்டவர் கொடுத்த வேலையை முழுஅன்போடு செய்து ஓட்டத்தை முடிப்போம். கல்வாரி நாயகரை மகிமைப்படுத்துவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

