நீதிமான் இரட்சிக்கப்படவேண்டுமா? (Should the righteous be saved?)

1 பேது 4:18. நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/VgbbsasManA

இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள் என்று ரோம 3:24 கூறுகிறது. கிருபை என்பது இலவசமாக தேவன் அருளும் ஈவு. அப்படியென்றால் கிருபையினாலே மீட்கப்பட்டவர்கள் நீதிமான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார் என்று ரோம 4:25 கூறுகிறது. அப்படியென்றால் இயேசுவின் மரணம் அவருடைய உயிர்தெழுதலால் நாம் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க, நீதிமான்களின் இரட்சிப்பு அரிது என்றால் என்ன? நான் நீதிமான் என்றழைக்கப்படும்போது, நான் இரட்சிக்கப்படுவது அரிது என்பதை விளங்கிக்கொள்ளமுடியவில்லையே என்று நீங்கள் கேட்கலாம்.

மேல்குறிப்பிட்ட வசனத்தில் நீதிமானே என்று வார்த்தை கடந்த காலம் அதாவது Past Tense; இரட்சிக்கப்படுவது என்ற வார்த்தை நிகழ்காலம் மற்றும் வருங்காலம் அதாவது Present and Future Tense. முடிவுப்பரியந்தம் நிலைநிற்பவனே பாக்கியவான் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம் என்று எபி 6:4-6 வசனங்கள் கூறுகிறது.

கிருபையினாலும், இயேசுவின் மரணம் மற்றும் அவருடைய உயிர்தெழுதலினாலும் ஒருகாலத்தில் நீதிமான்களாக்கப்பட்டவர்கள், பின்னாட்களில் மறுதலித்து பின்வாங்கிப்போனவர்களாய் இந்நாட்களில் அநேகர் காணப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இரட்சிக்கப்படுவது அரிதான காரியம் என்று ஆவியானவர் சொல்லுகிறார். ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுவதை காத்துள்ளவன் கேட்கக்கடவன். ஒரு ஊழியக்காரர் சொன்னார், சபைக்கு வெளியே இருப்பவர்களை காட்டிலும், சபைக்கு உள்ளே இருப்பவர்கள் தான் முதலாவது மனம் திரும்பவேண்டும் என்பதாக. சபைக்குள்ளாக இருந்து மாம்சீக இச்சைகளில் சிக்கி, மதுபானம் போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி, சகோதரர்களை குற்றப்படுத்துகிற விசுவாசிகள், ஒருகாலத்தில் நீதிமான்களாக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் இரட்சிக்கப்படுவது கடினம். நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்குங்காலமாயிருக்கிறது என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. நீதிமான்கள் என்றழைக்கப்பட்ட விசுவாசிகளிடம் தான் முதலாவதாக நியாயத்தீர்ப்பு வெளிப்படும். ஒருநாளில் நாமெல்லாரும் கர்த்தருடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும். அவருக்கு முன்பாக நாம் நம்முடைய எல்லா நடக்கைகளுக்கும் கணக்கொப்புவிக்க வேண்டும். அவருக்கு முன்பாக நிற்க பாத்திரவான்களாக எண்ணப்படும் பொருட்டு, நீதிக்கேற்ற ஜீவியம் செய்யுங்கள், உங்கள் நீதியில் முடிவு பரியந்தம் நில்லுங்கள். அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org