இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார், ……அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள் (1 சாமு. 17:46).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2AVOcGtOT6M
கர்த்தருடைய பிள்ளைகளே, இந்த நாளில் உங்கள் சத்துருக்களை உங்கள் கையில் கர்த்தர் ஒப்புக்கொடுப்பார். உங்களுக்கு முன்பாக கோலியாத்தைப் போலப் பர்வதங்களாய் காணப்படுகிற தடைகளைக் கர்த்தர் அகற்றுவார். உங்களுக்கு விரோதமாய் செயல்படுகிற எதிர் வல்லமைகளைச் சிறைப்படுத்துகிற அதிகாரத்தைக் கர்த்தர் உங்களுக்குக் கொடுப்பார். உங்களை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறவர்களைக் கர்த்தர் வெட்கப்படுத்துவார். உங்கள் எதிரிகளுக்கு முன்பாக கர்த்தர் ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி உங்களைத் தலைகளை உயர்த்துவார். ஆகையால் உங்களுக்கு ஒரு தேவன் உண்டு என்பதையும், அவருடைய வல்லமை என்ன என்பதையும் பூலோகத்தர் யாவரும் அறிந்து கொள்ளும் படிக்குக் கர்த்தர் செய்வார்.
பெலிஸ்தியர்கள் நோவாவின் வம்சத்தில் தோன்றின எழுபது சந்ததிகளுக்குள் ஒருவராய் காணப்படுகிறார்கள். பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப்தொரிமையும் பெற்றான் என்று ஆதி.10:14ல் எழுதப்பட்டிருக்கிறது. ஈசாக்கின் நாட்களிலிருந்து ஆபிரகாமின் சந்ததிக்கு இடையூறுகளை உண்டாக்குகிறவர்களாய் காணப்பட்டார்கள். ஈசாக்கு பெலிஸ்தர் தூர்த்துப் போட்டவையுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பனாகிய ஆபிரகாம் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான் என்று ஆதி.26:18ல் எழுதப்பட்டிருக்கிறது. வாக்குத்தத்தத்தின் சந்ததிக்கு எப்போதும் எதிர்த்து நிற்கிறவர்களாய் காணப்பட்தின் நிமித்தம், இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்பதிலிருந்து புறப்பட்டு வந்த வேளையில் பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல், சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார் (யாத். 13:17,18). அதுபோல இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுலின் நாட்களிலும் இஸ்ரவேலர்களுக்கு விரோதமாக யுத்தத்திற்குக் கடந்து வந்தார்கள். கோலியாத் என்ற ராட்சதன் நாற்பது நாட்கள் கர்த்தருடைய ஜனத்தை நிந்திக்கிறவனாகவும் அவமானப்படுத்துகிறவனாகவும் காணப்பட்டான். சவுலும் அவன் சேனைகளும் அவனுக்குப் பயந்து கலங்கினார்கள். தாவீது போர்முனைக்கு ஒரு முகாந்தரத்தோடு கடந்து வந்த வேளையில் காட்சி மாறினது. தாவீது இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் கோலியாத்திற்கு விரோதமாக எழும்பின வேளையில் கர்த்தர் அவனை தாவீதின் கையில் ஒப்புக்கொடுத்தார். அதைக்கண்டு பெலிஸ்தியர்கள் அத்தனை பேரும் இஸ்ரவேலர்களுக்கு ஒரு தேவன் உண்டு என்பதை அறிந்து, ஓடிப்போனார்கள்.
இந்நாட்களிலும் தேவ ஜனங்களுக்கு விரோதமாக, பெலிஸ்தியர்களைப் போல எதிர்த்து நிற்கிறவர்கள் உண்டு, துன்பப்படுத்துகிறவர்கள் உண்டு, சபைகளுக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகிறவர்கள் உண்டு, அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரங்களைத் தவறாகச் செயல்படுத்துவதும் உண்டு. ஆனால் கர்த்தர் அவர்கள் எல்லோரையும் உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார். நம்முடைய தேவன் பட்டயத்தினாலும், ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல. உன்னதமான தேவன் ஒருவரே மனுஷனுடைய ராஜ்யத்தில் ஆளுகைச் செய்கிறார். அவருக்குச் சித்தமானதைச் செய்கிறார், அவரைப் பார்த்து என்ன செய்கிறீர் என்று கேட்க ஒருவனும் இல்லை என்பதை உங்கள் எதிரிகள் மாத்திரமல்ல, பூலோகத்தார் யாவரும் அறிந்துகொள்ளும் படிக்குச் செய்வார். அவர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். உங்கள் ஆவிக்குரிய எதிரிகளையும், மாம்சத்திற்குரிய எதிரிகளையும், கோலியாத்தைப் போல உங்களுக்கு முன்பாக முகங்குப்புற விழச்செய்வார், தோற்றுப் போகும் படிக்குச் செய்வார். உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

