உபா 4:2. நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/LtEi1FOLUqY
வேத வசனங்கள் ஒவ்வொன்றும் கர்த்தருடைய ஆவியானவரால் கொடுக்கப்பட்டது. அவற்றை ஒருபோதும் கூட்டவும் குறைக்கவும் திருத்தியும் கர்த்தருடைய ஜனங்கள் போதிக்கவும், படிக்கவும் கூடாது. கிறிஸ்துவர்களாகிய சிலர் தங்களுக்கு தானே சில உபதேசங்களை வைத்துக்கொண்டு, வேதத்துக்கு ஒவ்வாத காரியங்களை பின்பற்றும்படியாக வற்புறுத்தபடுகிறார்கள். சில கூட்டம் எல்லாரும் வெள்ளை நிற ஆடையை தான் உடுத்தவேண்டும் என்று போதிக்கிறார்கள். சில கூட்டம் முகத்திலிருக்கும் மீசையை ஆண்கள் எடுக்கவேண்டும் என்று போதிக்கிறார்கள். சில கூட்டம் ஊழியர்கள் தங்கள் தாங்களே வேலைசெய்து ஆதரித்துக்கொள்ள கூடாது என்று போதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அப்போஸ்தலனாகிய பவுல் வேலை செய்து ஊழியம் செய்ததை மறந்து போய் விட்டார்கள். சில கூட்டம் பரிசுத்தமான ஜீவியம் செய்வதற்கு திருமணம் செய்ய கூடாது என்று போதிக்கிறார்கள். ஆனால் பவுல், பர்னபா தவிர மற்ற அப்போஸ்தலர்கள் திருமணம் செய்துகொண்டார்கள் என்ற வேத வசனத்தை விட்டு விட்டார்கள். மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? (1 கொரி 9:5) என்று வசனம் சொல்லுகிறது. சில கூட்டம் ஆராதனையில் தரையில் தான் எல்லாரும் உக்காரவேண்டும் என்று போதிக்கிறார்கள். இவைகளை செய்தால் தான் ஆவிக்குரிய காரியம் என்று வேதத்திற்கு புறம்பாத காரியங்களை, கூட்டியும், குறைத்தும் சொல்லும் ஒன்றையும் கர்த்தருடைய ஜனங்கள் ஏற்றுக்கொள்ளலாகாது.
ஆண்டவர் மனிதனிடம் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் என்று சொன்னார். அனால் ஏவாள் அதை கூட்டி சாத்தானிடம் புசிக்கவும் தொடவும் வேண்டாம் என்று கர்த்தர் சொன்னதாக சொன்னாள். ஆண்டவர் அவர்களிடம் புசிக்க வேண்டாம் என்று சொன்னார். ஆனால் ஏவாள் வார்த்தையை கூட்டி புசிக்கவும் தொடவும் வேண்டாம் என்று கர்த்தர் சொன்னதாக சொன்னாள் (ஆதி 2:16,17 ; 3:2,3). வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் தேவனுடைய வார்த்தையோ ஒழிந்துபோவதில்லை என்று வசனம் சொல்லுகிறது. ஆகையால் வார்த்தையை திருத்தியோ, கூட்டியோ, குறைத்தோ, உபதேசிப்பவர்களுக்கு எச்சரிக்கையாய் இருங்கள்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

