யாகேல் – ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்(Jael – Blessed among women)

ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்,    கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே (நியாயாதிபதிகள் 5:24).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/K21f-Gwua-c

யாகேல் கேனிய வம்சத்தைச் சார்ந்தவள்,    அவள்  கேனியனான  ஏபேரின்  மனைவியாகக் காணப்பட்டாள். இந்த வம்சம் மீதியானியர்களின் உறவினர்களாகக் காணப்பட்டார்கள் (நியா.1:16).  அவளை ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் (most blessed among women) என்று வேதம் கூறுகிறது. ஒரு புறஜாதி ஸ்திரீயாகக் காணப்பட்டாலும் இயேசுவின் தாயாகிய மரியாளைக் குறித்து  (blessed among women) எழுதப்பட்டதை விட உயர்வாக  யாகேலைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. கூடாரங்களில் வாசம் பண்ணுகிற குடும்ப ஸ்திரீகளுக்குள்ளேயும் இவள் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும்  அழைக்கப்படுகிறாள்.   இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாய் யுத்தம் செய்யும்படிக்கு வந்த யாபீன் என்ற கானானிய ராஜாவின் சேனாதிபதியாகிய  சிசெரா என்பவனை கொன்றுபோட்டதின் நிமித்தம் இவ்வண்ணமாக கர்த்தரால் கனம் பண்ணப்பட்டாள். அந்நாட்களில் யாபீனுக்கும்,    கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது. ஆகையால் சிசெரா தான் நிச்சயம் காப்பற்றப் படுவேன் என்ற நம்பிக்கையோடு ஏபேரின் வீட்டிற்கு வந்தான்,    ஆனால் யாகேல் சமாதானத்தின் உடன்படிக்கை காணப்பட்டிருந்தும்,    தேவனுடைய ஜனங்களாகிய  இஸ்ரவேல் ஜனங்களுக்குத் துணை நின்று அவர்களுடைய எதிரியைக் கொன்று போட்டதின் நிமித்தம் ஆசீர்வதிக்கப்பட்டவளானாள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களுக்குத் துணைநின்று,    உங்களுக்கு உதவிசெய்கிறவர்களைக்  கூட கர்த்தர் ஆசீர்வதிக்கிறவர்.

தெபொராள் நியாயம் விசாரித்து வந்த நாட்களில் யாபீன் யுத்தத்திற்கு வந்தான். அப்பொழுது தெபொரா,    அபினோகாமின்  குமாரன் பாராக்கை வரவழைத்து,    நீ நப்தலி புத்திரரிலும்,    செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு,    தாபோர்  மலைக்குப் போ,    நான்  யாபீனின்  சேனாதிபதியாகிய சிசெராவையும்,    அவன் ரதங்களையும்,    அவன் சேனையையும்,    கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து,    அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும்,    இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்றாள். அதற்குப் பாராக்,    நீ என்னோடே கூட வந்தால் போவேன்,    என்னோடே கூட வராவிட்டால்,    நான் போகமாட்டேன் என்றான்.  அதற்கு அவள்: நான் உன்னோடே கூட நிச்சயமாய் வருவேன். ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது. கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி,    தெபொராள் எழும்பி,    பாராக்கோடேகூடக்   போனாள். செபுலோனும் நபதலியும் இசக்காரின் ஜனங்களும் தெபொராளோடே கூடியிருந்தார்கள். ஆனால் ரூபன் கோத்திரம் பிரிந்து நின்றது. அவர்கள்  பிரிவினைகளால் உண்டான மனவிசாரங்கள் மிகுதியாய் காணப்பட்டது. அதுபோல  கீலேயாத்  மனுஷர்  யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள,    தாண் மனுஷர் கப்பல்களில் தங்கியிருந்தார்கள்,    ஆசேர் மனுஷர் கடற்கரையிலே தங்கி,    தங்கள் நுழைவாயில்களில் தாபரிதிருந்தார்கள். இவற்றிலிருந்து இஸ்ரவேலின்  எல்லா கோத்திர ஜனங்களும் ஒரு மனதோடு யுத்தத்திற்குக் கடந்து செல்லவில்லை. கர்த்தருடைய ஜனங்களுக்குள் ஒருமனமும்,    ஐக்கியமும் இந்நாட்களில் அதிகமாகக் காணப்பட வேண்டும். சத்துரு பிரிவினைகளைக்  கொண்டுவருகிறவன். பிரிவினைகள்  நம்மைப் பலவீனப்படுத்தி,    மனவிசாரங்களைக் கொண்டு வந்து விடும்.


கர்த்தர் வானத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களுக்காக யுத்தம் பண்ணினார்,     நட்சத்திரங்கள் தங்கள் பாதைகளிலிருந்து  சிசெராவுக்கு  விரோதமாக யுத்தம் பண்ணின. ஆகையால்  சிசேராவின் சேனையனைத்தையும் பட்டயக்கருக்கினால் அழிக்கும் படிக்குக் கர்த்தர் பாராக்கிற்கும் அவனுடைய ஜனங்களுக்கும் உதவிசெய்தார். கடைசியில் கால்நடையாய் ஒடி தப்பிக்கும் படிக்கு நினைத்த சிசெராவும் யாகேலில் கையில் விழுந்தான். அவள் கூடார ஆணியை எடுத்து,     சுத்தியைப் பிடித்துக்கொண்டு,     அவன் நெற்றியில் அந்த ஆணியை அடிக்க,     அயர்ந்து தூங்கின சிசெரா அவள் காலடியில் மடிந்து விழுந்தான். கர்த்தர் சிசேராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்ற சொன்ன வார்த்தையின்படி,     அவனை யாகேலின் கையில் ஒப்புக் கொடுத்தார். தேவனுடைய ஜனங்களுக்காக அவள் இதைச் செய்ததினால்,     எல்லா ஸ்திரீகளைப் பார்க்கிலும் ஆசீர்வதிக்கப்பட்டவளானாள். தேவனுடைய ஜனங்களுக்காக அவள் பாராட்டின் வைராக்கியம்,     அவளை ஆசீர்வதிக்கப்பட்டவளாக மாற்றினது. கர்த்தருடைய பிள்ளைகளே,     புறஜாதிகளாய் காணப்பட்ட நாமும் கூட,     கிருபையாய் இஸ்ரவேலின் காணியாட்சிக்குள்ளாய் வந்திருக்கிறோம். நாம் கர்த்தருக்காகப் பாராட்டுகிற வைராக்கியங்கள் நம்மை விஷேசித்தவர்களாகவும்,     ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் மாற்றும். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar