அப் 5:15,16 பிணியாளிகளைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NnOe4m3sYQ8
ஆதி அப்போஸ்தல நாட்களில் நடைபெற்ற முதல் மருத்தவ முகாம் தான் மேற்குறிப்பிட்ட வசனம். இந்த மருத்தவ முகாமில் குணப்படுத்தியவர்கள், படித்து மருத்தவ பட்டம் வாங்கவில்லை; படிப்பறிவில்லாத மருத்துவர்களாக தான் அவரகள் இருந்தார்கள். குறிப்பாக பேதுரு மீன்பிடிக்கிற தொழில் செய்தாலும் பிணியாளிகளை குணமாக்கும் தெய்வீக வரத்தை பெற்றிருந்தான். பேதுரு ஐந்து வருஷம், ஏழு வருசமாக மருத்துவம் பயிலவில்லை. ஆனால் மருத்துவர்கள் குணப்படுத்தமுடியாத வியாதியுள்ளோர்கள் பேதுருவின் நிழல் பட்டு குணமடைந்தார்கள். இந்நாட்களில் நோய்வாய்பட்டவர்களை மருத்துவமனையில் stretcher ல் வைத்து எடுத்துசெல்லுவார்கள். அதுபோல அந்நாட்களில் முடியாதவர்களை கட்டிலின் மீது வைத்தார்கள். சுற்றுபட்டணங்களிலிருந்து திரளான ஜனங்கள் வந்திருந்தார்கள். அவர்களெல்லாரும் மருத்துவமனைக்கு சென்றிருப்பார்களென்றால், அங்கே அவர்களை வைப்பதற்கு இடம் போதியதாக இல்லாமல் இருந்திருக்கும். அவ்வளவு பிணியாளிகளை அப்போஸ்தலர்களிடம் கொண்டுவந்திருந்தார்கள். பேதுரு அவர்களுடைய நாடித்துடிப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்கவில்லை; கண்களை திறந்து பார்க்கவில்லை; சுவாசம் எப்படி இருக்கிறது என்று பார்க்கவில்லை; மருந்து மாத்திரை ஒன்றும் கொடுக்கவில்லை; ஒரு Injection ம் போடவில்லை. அவன் அவர்கள் இருக்கும் இடம் அருகே போனான். அவனுடைய நிழல் பட்டு, வந்தவர்கள் அத்தனைபேரும் குணமாக்கப்பட்டார்கள். காரணம் அவன் மேல் இருந்த தேவ வல்லமை. நாகமனுடைய குஷ்டம் நீங்க எலிசா வந்து அவன் சரீரத்தை தொட்டு சுகமாக்குவான் என்று நாகமான் நினைத்தான். ஆனால் எலிசா யோர்தானில் போய் ஏழு முறை மூழ்கும்படி சொன்னான். அந்த வார்த்தைக்கு அவன் கீழ்ப்படிந்தபோது, நாகமானுடைய சரீரம் ஒரு குழந்தையை போல மாறியது. தேவனுடைய அற்புத வல்லமைக்கு எல்லை கிடையாது. ஆண்டவர் எவரையும் எப்படியும் எப்பொழுதுவேண்டுமானாலும் குணப்படுத்த வல்லமையுள்ளவர்.
அதே தேவ வல்லமை இந்நாட்களிலும் கிரியை செய்யும் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். தேவனுடைய அற்புத வல்லமையை விசுவாசியாமல் இருப்பவர்கள் தப்பான எண்ணம் கொள்ளுகிறார்கள் என்று வசனம் கூறுகிறது. மத் 22:29ல் இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்று பரிசேயர்களை இயேசு கடிந்துகொண்டார். இன்றைக்கு இருக்கும் பிற்போக்கு எண்ணம் கொள்ளுபவர்கள், பரிசேயர்கள் குணாதிசயத்தை உடையவர்கள் அற்புத வல்லமையை நம்பமாட்டார்கள். தேவனால் அற்புத வல்லமையை செய்ய முடியுமா என்று கேள்விகேட்காதீர்கள். தேவனால் மாத்திரமே முடியும் என்று நம்புங்கள். அப்படி விசுவாசித்து தேவ வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

