ஏழைகளின் தேவன் (God of the Poor)

சங் 34:6. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/bz0YZCQbOmo

ஏழைகளை நியாயத்தோடு விசாரிப்பார் என்றும் ஏழையின் பிள்ளைகளை கர்த்தர் இரட்சிப்பார் என்று சங் 72:2 மற்றும் 4 கூறுகிறது. ஒரு தேவபிள்ளை 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தான். ஒரு பேனா அல்லது பென்சில் கூட வாங்க அவனிடம் பணம் இல்லை. அதனால் அவன் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அதற்குக் கூட அவன் அம்மாவிடம் பணம் இல்லை. தலையில் மண்ணைச் சுமந்து லாரியில் ஏற்றி பணம் சம்பாதிப்பதற்காக வேலை செய்தான். ஒரு நாளைக்கு ஆறு ரூபாய் கூலி கிடைத்தது. அவன் மிகவும் இளமையாக இருந்தபோது தன் தந்தையை இழந்தான். ஆனால் தேவன் அவனுக்கு பரலோகத் தந்தையானார். பண விஷயங்களிலும், மற்ற விஷயங்களிலும் உண்மையுள்ளவனாக இருக்க தேவன் அவனை பாதுகாத்து வந்தார். அவன் வேலை செய்யும் கடையில், பணப் பெட்டியில் எப்போதும் 100,000 முதல் 150,000 ரூபாய் வரை இருக்கும். ஆனால் நான் என் பரலோகத் தலைவருக்கு முன்பாக வாழ்கிறேன், அதனால் அந்தக் கடையில் உள்ள பணத்தை நான் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்துவதில்லை என்று உத்தமத்தோடு இருந்தான்.

பின்பு அவன் மாதத்திற்கு 20,000 ரூபாய் சம்பளம் பெற தேவன் உதவினார். அவன் சொன்னான், “என் வாழ்க்கைக்காக நான் என் தோளில் கற்களைச் சுமந்து சென்ற நாட்களில், நான் கர்த்தரைப் பாடினேன். இப்போது நான் ஒரு நல்ல கடையில் வேலை செய்யும்போதும், நான் கர்த்தரைப் பாடுகிறேன்” என்றான். தாவீது ஒரு ஏழை மேய்ப்பனாக இருந்தபோது, “இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் அவன் கூப்பிடுதலைக் கேட்டார்” என்று பாடினார். அவன் ஒரு ராஜாவானபோதும், இப்படித்தான் பாடிக்கொண்டிருந்தான். நம் பரலோகத் தகப்பன் நம் ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார். தேவன் ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்திலிருந்து வெளியேற்றியபோது, அவர்களை நிர்வாணமாக விரட்டவில்லை. அவர்களுக்கு உடுத்துவதற்கு ஆடைகளைக் கொடுத்தார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அது தேவனின் நன்மையின் அடையாளம்.

மாற்கு 12:42,43ல் ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, “காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். ஏழை விதவையை இயேசு கனப்படுத்திப் பேசினார். அவள் ஒரு ஏழை என்று அவளைக் கண்டும் காணாமல் இருக்கவில்லை. இயேசு அவள் உள்ளத்தைப் பார்த்து அவள் மற்ற பணக்காரர்களைப் பார்க்கிலும் அவள் இருதயம் செழுமையாய் இருப்பதைப் பார்த்தார். இயேசு எந்தவொரு பாகுபாடும் இல்லாதவர். இந்நாட்களில் அநேகர் இயேசு வெள்ளைகாரர்களின் கடவுள், பணக்காரர்களின் கடவுள் என்று சொல்லி தவறான எண்ணம் கொள்ளுகிறார்கள். இயேசு முழு உலகத்திற்கும் தேவன். யாரையும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காதவர். ஒரு தகப்பனுக்கு இருந்த இரண்டு குமாரர்களில் ஒருவன் மருத்துவராகவும் மற்றொருவன் கூலி வேலை செய்தாலும், இரண்டு பேரும் தகப்பனுக்குப் பிள்ளைகள் தான். அவற்றில் மாற்றுக்கருத்தே வருவதில்லை. அதுபோல தான் இயேசுவுக்கும் ஏழையாக இருந்தாலும் பண்ணைக்காரர்களாக இருந்தாலும் அவர்களெல்லாரும் பிள்ளைகள் தான். “நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக” என்று லூக்கா 14:13ல் அவர் ஏழைகளை விருந்திற்கு அழைக்க மறக்கவில்லை. காரணம் அவர் ஏழைகளுக்கும் தேவன்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org