எப்படி செழுமையாக இருப்பது ? (How to be rich?)

நீதி 3:9,10 உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/GoMJDb7rt0s

உங்கள் செல்வத்திலிருந்து கர்த்தரைக் கனம்பண்ணுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால், உங்கள் பணத்தால் தேவனை மகிமைப்படுத்துங்கள். முதலாவது நாம் தேவனை மகிமைப்படுத்த அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் எல்லா விளைச்சலிலிருந்தும் முதலில் அவரைக் கனம்பண்ணுங்கள். அதாவது: உங்கள் வருமானத்தின் முதல் பகுதியை அவருக்குக் கொடுங்கள். ஆதியாகமம் 4-ஐ படிக்கும்போது ஒரு விஷயத்தைக் கவனித்துப் பாருங்கள். காயீனும் ஆபேலும் கொண்டு வந்த காணிக்கைகளில், தேவன் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக்கொண்டார் என்பது நமக்குத் தெரியும், ஆனால் அவர் காயீனின் காணிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஆபேலுக்கும் காயீனுக்கும் இருந்த இருதய மனப்பான்மையைக் குறிக்கிறது. காயீனைப் பற்றி பரிசுத்த ஆவியானவர் பதிவு செய்யும் ஒரே விஷயம் என்னவென்றால், காயீன் நிலத்தின் கனிகளைக் காணிக்கையாகக் கொண்டு வந்தான் என்பதுதான். அது முதலாவது அல்ல, அது மிகச் சிறந்ததும் அல்ல, அது ஒரு வெறும் காணிக்கை மட்டும்தான். ஆனால் ஆபேல் காணிக்கையைக் கொண்டு வந்தபோது, மந்தையின் முதல் பகுதியையும் அவற்றின் கொழுப்பான பகுதிகளையும் கொண்டு வந்தான். அதாவது அவன் மிகச் சிறந்ததைக் கொண்டு வந்தான். ஆபேல் சிறந்ததைக் கொண்டு வந்ததால் கர்த்தர் அவனை மதித்தார். நாம் அவருக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்போது கர்த்தர் இருதய மனப்பான்மையைக் காண்கிறார். இன்றும் கூட, தேவாலயத்தில், மக்கள் காயீனைப் போல ஒரு காணிக்கையைக் கொண்டு வரலாம். ஆனால் அவர்களின் சிறந்ததை அல்ல. காயீனைப் போல நாம் ஒருபோதும் கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டு வரக்கூடாது. நாம் கர்த்தருக்கு செலுத்தும் அனைத்தும் மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். ஆபேல் சிறந்ததைக் கொடுத்தான், தேவன் அதை ஏற்றுக்கொண்டார்.

இதற்கு கீழ்ப்படிந்தால், தேவன் உங்களுக்குக் கடன்பட்டிருக்க மாட்டார் என்று கூறுகிறார். அவர் உங்களை வளப்படுத்துவார், உங்களை செழிப்பாக இருக்கபண்ணுவார் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். வசனம் கூறுகிறது, “களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்” என்பதாக.

இன்று நம்மிடம் அந்நாட்களில் இருந்தது போல களஞ்சியங்கள் இல்லை, ஆலைகளும் இல்லை. ஆனால் நம்மிடம் வங்கிக் கணக்குகள் உள்ளன. உங்கள் வங்கிக் கணக்குகள் நிரம்பி வழிவதை எல்லாரும் விரும்புவீர்கள். உங்கள் வருமானம் வீணாகப் போகாமலும், பொத்தலான பைகளில் உங்கள் வருமானம் போகாமலும், வீண் செலவுகளையும், மருத்துவ செலவுகளையும் தவிர்த்து, ஆரோக்கியமாகவும், செழிப்பாக இருக்கவும் ஒரு வழி என்னவென்றால், உங்கள் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணுங்கள். கர்த்தருடைய இராஜ்யத்திற்கு அடுத்த பணிகளில் முதலானவைகளை சிறந்ததையும் கொடுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை செழிக்க செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org