யோவான் ஸ்நானகனின் கேள்வி:-

மத்தேயு 11 : 3. வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.

யோவான் ஸ்நானகன் வானம் திறக்கப்பட்டதையும், பரிசுத்த ஆவியானவர் புறாவின் ரூபம்கொண்டு இயேசுவின் மீது வந்தமர்ந்ததையும், இவர் என் நேச குமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் என்ற சத்தத்தையும் கேட்ட மனிதன். ஒருவேளை நாம் இப்படிப்பட்ட சம்பவங்களை நேரில் பார்த்தும் கேட்டுமிருந்தால், ஒருவேளை சந்தேகத்துடன் வருகிறவர் நீர்தானா என்று கேட்கமாட்டோம். ஆனால் இங்கே பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த மிகவும் நல்ல மனிதனுக்கு ஏன் இந்த கேள்வி வந்துவிட்டது. இயேசு யோவானை தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன், ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை என்றெல்லாம் சொல்லுகிறபோதிலும் ஏன் யோவானுக்கு இப்படிப்பட்ட கேள்வி. ஏனென்றால், இயேசு பல அற்புதங்களை குருடர்கள் பார்வையடைகிறதையும், செவிடர்கள் கேட்கறதையும், முடவர்கள் நடக்கிறதையும் அறிந்த யோவான், ஏன் இயேசு தன்னை சிறைப்படுத்தின ஏரோதை கொன்று தன்னை சிறைச்சாலையில் இருந்து விடுதலை பண்ணவில்லை என்று நினைத்து இந்த கேள்வியை எழுப்பியிருக்கக் கூடும். நாமும் கூட ஒரு சில வேளைகளில் நமக்கெதிராக எலும்புபவர்களை ஏன் இயேசு கொன்றோ இல்லை ஒழித்துவிடவோ கூடாது என்பதாக. இதே சந்தர்ப்ப சூழ்நிலை இயேசுவுக்கு வந்தபோது இயேசு என்ன செய்தார். இயேசுவை ரோம போர்சேவகர்கள் பிடித்தபோது ஒருவேளை இயேசு தன்னை விடுதலையாக்கிக்கொள்ள தூதர்களை கூப்பிட்டிருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை. அடிக்கப்படுவதற்கு தன்னை பூரணமாக ஒப்புக்கொடுத்தார்.

சிறைச்சாலையில் இருந்த பவுலும் சீலாவும், சந்தேகப்படாமல் துதித்து பாடினார்கள்; காரணம் பவுலும் சீலாவுக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் இருந்தார்.

இதிலிருந்து அறிந்துகொள்ளவேண்டிய சத்தியம் என்னவென்றால், புதிய உடன்படிக்கையின் சுவிசேஷம், பாவத்திலிருந்து விடுதைப்பெறவேண்டியதே அல்லாமல், இருக்கிற வரங்களை கொண்டு மற்றவர்களை கொன்று சிறைச்சாலையிலிருந்து தப்பவேண்டும், மற்றவர்களை தாக்கி பேசி உயரவேண்டும், மற்றவர்களை கீழே தள்ளவேண்டும் என்பதற்காக அல்ல.

சூழ்நிலை சாதகமாக இல்லாதபோதும் பவுலும் சீலாவையும் போல துதித்து பாடுங்கள். அப்பொழுது கர்த்தர் சிறைச்சாலை என்னும் சந்துருவின் கோட்டைகளை உடைப்பார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org