என் கன்மலை(My Rock):-

சங் 144 : 1. என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

For audio podcast of this Manna Today, please click the link,

மோசே தேவ மகிமையை பார்க்கும்போது கன்மலையின் வெடிப்பில் இருந்தான். இஸ்ரவேல் ஜனங்கள் தண்ணீரில்லாமல் இருந்த போது ஆண்டவர் கன்மலை பார்த்து பேசுங்கள் என்று சொன்னார். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள். அன்னாள் சொன்னால் என் தேவனை போல ஒரு கன்மலையும் இல்லை என்று. தாவீது இப்படியாக சொல்கிறான்
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர். கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்? கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக என்பதாக (II சாமுவேல் 22:2,32 ,47).

யார் இந்த கன்மலை? வசனம் சொல்கிறது எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே (I கொரிந்தியர் 10:4) என்பதாக. ஆம் கிறிஸ்து தான் கன்மலை. அந்த கன்மலைக்குள்ளாக நாம் வரும்போது சுகமாய் தங்கி இளைப்பாறமுடியும்.

கிறிஸ்துவாகிய அந்த கன்மலையின் மீது அஸ்திபாரத்தை போடும்போது பெருமழை, வெள்ளம், காற்று அடித்தாலும் நாம் விழுவதில்லை. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது (மத் 7 : 24 ,25).

கன்மலையாகிய கிறிஸ்து உங்கள் கைகளை போருக்கும், உங்கள் விரல்களை யுத்தத்திற்கும் பழக்குவிப்பார். தாவீதின் கையை கோலியாத்துக்கு விரோதமாக படிப்பித்த கன்மலையாகிய கிறிஸ்து உங்கள் கையையும் சத்துருவுக்கு விரோதமாக யுத்தம் செய்யும்படி படிப்பிப்பார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org