மரணபரியந்தம் நம்மை நடத்துவார்:-

சங்கீதம் 48:14 இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.

தேவன் நம்முடைய வாழ்க்கையில் நியமித்த காலம் வரையில் அவர் நடத்துவர். அவர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காலத்தை அதாவது யேசுவோடு கூட சேர்த்துக்கொள்ளப்படுகிற நாட்களை நியமித்திருக்கிறார். அந்த நாள் முந்தவும் செய்யாது; பிந்தவும் செய்யாது. அதுவரையில் நம்மை வலக்கரத்தை பிடித்து நடத்துவார். ஆசாப் என்னும் சங்கீதக்காரன் சொல்லுகிறான் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர் (சங் 73 : 23 ).

ஆகையால் சம்புவிக்கிற காரியங்கள் எப்படியாக இருந்தாலும் அதை பற்றி கவலை பட தேவையில்லை. கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான் ( லூக்கா 12:25 ) என்று இயேசு சொல்கிறார். ஒருவரும் கொரோனா வைரஸ் வந்ததால் சரீரத்தை கூட்டமுடியாது. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார் (லூக்கா 12:29 , 30).

தேவையானது ஒன்று தான். யேசுவுடைய பாதத்தில் அமர்ந்திருப்பது. அப்பொழுது அவர் நீங்கள் கேளாததையும் தருவார். உலகத்தார் போல மரணத்தை பார்த்து பயப்பட வேண்டாம். இந்த வைரஸ் கிருமியின் அச்சுறுத்தலினால் பெரிய பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், துன்மார்க்கர்கள் பயந்து போய் காணப்படுகிறார்கள், நிம்மதியை இழந்து காணப்படுகிறார்கள், அடுத்து என்ன சம்பவிக்குமோ என்ற நிச்சயம் இல்லாமல் காணப்படுகிறார்கள். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கோ ஒரு நிச்சயம் காணப்படுகிறது. அது என்ன நிச்சயம் இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய் ( சங் 91 : 6 ) என்ற ஒரு நிச்சயம். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது என்ற ஒரு நிச்சயம். இன்று இப்பூமியில் கண்ணை மூடினாள் அடுத்த வினாடி கண்ணை திறக்கும்போது மகிமை பொறிந்தவரை, பதினாயிரங்களில் சிறந்தவரே, பூரண அழகுள்ளவரை பாப்போம் என்ற நிச்சயம்.

ஆகையால் கவலை படாதிருங்கள். இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org