ஆவியின் ஏவுதல்

ஒரு தேவ பிள்ளையை ஆவியானவர் ஏவுதல் கொடுத்து நடத்துகிறார். சில சமயம் சாத்தானும் ஏவுதல் கொடுக்கமுடியும் அல்லது மாமிசத்திலோ மற்ற மனிதர்களாலோ ஏவுதல் உண்டாகிறது.
ஆனால் தேவ ஆவியானவர் ஏவுதல் தந்து நடத்தும் போது அந்த காரியத்தின் முடிவு மகிமையாக இருக்கும்.

மாம்சத்தில் உண்டாகிறது மரணத்தை பிறப்பிக்கும் ஆவியில் உண்டாகிறது ஜீவனை பிறப்பிக்கும்.

சிமியோன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார் (Luke 2:25). ஆவியானவரின் ஏவுதலினாலே சிமியோன் ஆலயத்திற்கு வந்தபோது, அவர் கிறிஸ்துவை கண்டுகொண்டார்.

அந்நாட்களில் எத்தனையோ வேத அறிஞர்கள் கிறிஸ்து எங்கு பிறப்பார்,யாருடைய வம்சத்தில் வருவார் என்று அறிந்திருந்தும் கிறிஸ்துவை அடையாளம் காணாமல் போனார்கள்.

ஆனால் ஆவியானவரின் ஏவுதலை பின்பற்றின சிமியோன், கிறிஸ்துவை கண்டார்.

இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் எடுத்த பின்பு ஆவியானவரின் ஏவுதலினாலே அவர் வனாந்திரம் சென்றார்.
(Mark 1:18). பிசாசின் சோதனைகளை ஜெயித்து ஆவியானவரின் பெலத்தினால் திரும்பினார்.

ஒரு சமயம் தேவ ஊழியர் ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு செல்லும்படி பரிசுத்த ஆவியானவர் ஏவுதல் கொடுத்தார் .அந்த ஊழியக்காரரும் அதற்கு கீழ்ப்படிந்து சென்றபோது அந்த வீட்டில் உள்ளவர்கள் தற்கொலை செய்யும் படி எண்ணிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு தேவ வார்த்தையை சொல்லி, விசுவாசத்தில் நடத்தினார். ஒரு வேளை அந்த ஊழியக்காரர் ஆவியானவரின் ஏவுதலுக்கு கீழ்ப்படியாமல் போயிருந்தால் அந்த குடும்பம் தற்கொலை செய்துகொண்டிருக்கும்.

வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களை பரிசுத்த ஆவியானவர் அதியசமாய் நடத்தினார். அப்போஸ்தலர்களை நடத்தினார். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் (Rom 8:14) என்று வேதம் சொல்கிறது.

ஆவியானவர் நடத்தும் போது ஒருவேளை ஆரம்பம் அற்பமானதாக அல்லது நாம் விரும்பக்கூடிய வழியில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதன் முடிவு மகிமையாக இருக்கும்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !

If the Holy Spirit guides us, He will do it according to the Scriptures and never contrary to them – George Muller

Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *