நீதிமொழிகள் 22:29 தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
வேலை ஸ்தலங்களில் நாம் உயர்வை அடையும்படிக்கு கர்த்தர் விருப்பமுள்ளவராயிருக்கிறார். அன்பு சகோதரர் மூத்த ஊழியர் சகோ. ஸ்டான்லி அவர்கள் வேலை ஸ்தலங்களில் ஆசீர்வாதமாக இருக்க பத்து குறிப்புகளை வேதாகமத்தின் அடிப்படையில் விவரித்துக்கூறின காரியங்கள் நிச்சயமாக நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும். எப்படி வேலை செய்ய கூடாது என்பதில் அவர் விளக்கிய பத்து காரியங்கள்:-
- உலகப்பணி, ஆன்மீகப்பணி என்று அதிகமாக வேறுபடுத்தாதீர்கள்.
Do not over differentiate between the secular and sacred. - வேலையில் சராசரியாக இருப்பதில் திருப்தியடையாதீர்கள்.
Do not be satisfied with average performance. - திட்டமிடுதலின் முக்கியத்துவத்தை மறந்துவிடாதீர்கள்.
Do not forget the importance of planning. - காலத்தை விரயம் செய்யாதீர்கள்.
Do not waste time. - நீங்கள் செய்ய வேண்டிய வேலைக்கு தேவ கிருபையை பதிலாக்காதீர்கள்.
Do not substitude skills for hardwork. - மற்றவர்களிடமிருந்து கற்று கொள்வதற்கு தயங்காதீர்கள்.
Do not hesitate to learn from others. - தொண்டுள்ளதை விட்டு விடாதிருங்கள்.
Do not lose the spirit of servanthood. - உடல் நலத்தை அசட்டை செய்யாதிருங்கள்.
Do not neglect your body. - சிறு காரியங்களின் முக்கியத்துவத்தை அலட்சியம் செய்யாதிருங்கள்.
Do not underestimate the importance of small things. - ஒருபோதும் வேலையில் உற்சாகத்தை இழந்துவிடாதிருங்கள்.
Do not ever lose enthusiasm in work.
வேலையில் ஜாக்கிரதை காணப்படவேண்டும். சரியான நேரத்திற்கு சென்று யார் மேற்பார்வையிட்டாலும் சரி, மேற்பார்வையிடாமலிருந்தாலும் சரி, யார் அரசியல் செய்தலும், யார் இகழ்ந்தாலும், என்ன நடந்தாலும் கர்த்தர் கொடுத்த வேலையை நாம் ஜாக்கிரதையாய் செய்ய வேண்டும். ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான் (நீதி 12:24 ).
வசனம் சொல்கிறது வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் (கொலோ 3 : 22 – 24 ).
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் வசனத்தின்படி வேலையில் ஜாக்கிரதையுள்ளவர்களாக நடந்து சிறந்த மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும், அறிவியல் வல்லுனர்களாகவும், மேலதிகாரிகளாகவும், தொழிலில் சிறந்தவர்களாகவும் உயர்த்துவராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org