லுக் 6 : 38. கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
இயேசு ஒருமுறை காணிக்கைப்பெட்டிக்கு முன்பாக உட்கார்ந்து ஜனங்கள் காணிக்கை போடுவதை பார்த்துக்கொண்டிருந்தார். அதிக பணம் வைத்திருந்தவர்கள் அதிகமாக போட்டார்கள். அதே வேளையில் ஒரு ஏழை விதவை சிறிய காணிக்கையை போட்டாள். இந்த இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் பணக்காரன் தன்னிடமிருந்த காணிக்கையில் சிறு பகுதியை கொடுத்தான்; ஆனால் ஏழை விதவை தனக்கு இருந்த எல்லாவற்றையும் கர்த்தருக்கென்று கொடுத்தாள். அவள் எந்த சூழ்நிலையில் காணிக்கையை போட்டிருப்பாள் என்று யோசித்து பாருங்கள். அவள் ஒரு விதவை; அவளுக்கு உதவி செய்வதுக்கென்று யாருமில்லை; அடுத்த வேலை உணவுக்கு தன்னிடம் கொஞ்சம் கூட பணம் இருக்காது என்பதை அறிந்தவள். இப்படிப்பட்டதான வறுமையான சூழ்நிலையில் வேறே எதையும் யோசிக்காமல் இருந்த எல்லாவற்றையும் கர்த்தருக்கென்று கொடுத்துவிட்டாள். இயேசு இதை பார்த்து எல்லாருக்கும் முன்பாக அவளை மெச்சிக்கொண்டார். இயேசு நம்மை மெச்சிக்கொள்வது எவ்வளவு சிறப்பான கனமான காரியமாயிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.
ஒரு சில நேரங்களில் நாம் கர்த்தர் நம்மை நன்றாக ஆசிர்வதிக்கும்போது காணிக்கையை கொடுக்கிறோம்; அதிலும் ஒரு சிலர் கர்த்தருக்கென்று கொடுப்பதில் கஞ்சத்தனம் பட்டு அப்படியே இருக்கிறவர்களாகவும் காணப்படுகிறோம். ஆனால் இவையெல்லாவற்றிலுமிருந்து, எப்பேர்ப்பட்ட வறுமையிலும், சம்பளக்குறைவு ஏற்பட்டபோதும், வேலையில்லாத காலத்திலும் உற்சாகமாக கர்த்தருடைய ஊழியத்துக்கென்று காணிக்கைகளை விதைத்திருக்கோமா?
வசனம் சொல்கிறது அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார். நீங்கள் எந்த அளவு மனநிலையில் கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான் ( II கொரிந்தியர் 9:6 ).
கர்த்தர் தாமே உங்களுக்கு அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org